மாற்றம்
– டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி இந்த உலகத்தை ‘பூ’ உலகமாகவே எப்போதும் அவள் பார்த்து வந்தாள். எந்தப் பூங்காவிற்கு சென்றாலும் பூக்களைத் தவிர வேறு எதையும் அவள் காண்பதில்லை. மலர்களின் மென்மையும் வசீகரமும் வாய்க்கப்பெற்ற அந்தப் பெண்மணி விடியலில் பூக்களின் வரவுக்காக பூபாளம் இசைத்துக் கொண்டிருந்தாள்.