வளம் பெருக வேண்டுமா?

-தே. சௌந்தர்ராஜன்

(அடுத்த பத்து ஆண்டுகளில்)

நாம் உடல் நலம் இல்லாமல் மருத்துவரிடம் சென்றால் மருத்துவர் பல விதங்களில் (இரத்தம், மலம், சிறுநீர்) உடலை பரிசோதிக்கிறார். அப்போதும் காரணங்கள் சரியாக தெரியவில்லை என்றால் இரத்தத்தை எடுத்து கல்ச்சர் டெஸ்ட்டுக்கு (Culture Test) அனுப்புகிறார்.

இந்த கல்ச்சர் டெஸ்ட் என்றால் என்ன?

நுண் கிருமிகள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் போது நமக்கு புலப்படுவது இல்லை. எனவே நுண்கிருமியை நன்றாக வளரும் சூழ்நிலையில் அதை சில நாட்கள் பெருக வைத்து அதன்பின் அதை சோதித்து நுண்கிருமிகள் இருக்கிறதா என கண்டு அதற்கேற்ப வைத்தியம் செய்கிறார்.

இது போலவே வாழ்விலும் எதுவும் மிகக் குறைவாக இருக்கும்போது அல்லது மிகச் சிறியதாக இருக்கும்போது அதன் உண்மையான மதிப்பை நம்மால் கண்டுகொள்ள முடிவதில்லை.

நாம் அலட்சியமாக கசியவிடும் சில நிமிடங்கள், நாம் அலட்சியமாக வீணாக்கும் சில சில்லறைக் காசுகள் உண்மையிலேயே எத்தனை வலிமையானவை என்பதை நாம் உணர்ந்து கொள்ள முடிவதில்லை.

நாம் அதன் பலத்தை, உண்மையான பலத்தை புரிந்துகொள்ள வேண்டுமானால் அதைப் பெருக்கிப் பார்க்க வேண்டும்.

வாழ்க்கை என்பது வாழ்வதற்குத்தான் மறுப்பதற்கில்லை! பணம் என்பது பயன்படுத்துவதற்குத்தான். அதில் எந்த மாற்றமும் இல்லை.

நாம் வெளிநாடுகளுக்கு செல்லும்போது அங்குள்ள பொருட்களின் மதிப்பை அவர்கள் நாட்டு நாணயத்தின் செலாவணியில் விலையை கேட்கும் போது அதன் சரியான மதிப்பை நம்மால் புரிந்துகொள்ள முடிவதில்லை. எனவே நாம் என்ன செய்கிறோம் கால்குலேட்டரை எடுத்து நாம் நம் ரூபாய் கணக்கிற்கு அதை மாற்றி கணக்கிட்டு அதன் உண்மை மதிப்பை புரிந்து கொள்கிறோம்.

வாழ்வாங்கு வாழ வேண்டுமானால் பணத்தையும், நேரத்தையும் செலவு செய்யும்முன் அதை பெருக்கிப் பார்த்து, அதன் பின் முடிவு செய்வது மிக மிக பலனளிக்கும் மிகச் சிறந்த உத்தியாகும்.

அதுபோல நாம் தினசரி செய்யும் செலவுகளை 3650ஆல் பெருக்கிப்பார்க்க வேண்டும். வாரச் செலவானால் 520ஆல் பெருக்க வேண்டும். மாதச் செலவானால் 120ஆல் பெருக்கிப் பார்க்க வேண்டும். ஆண்டுச் செலவானால் 10ஆல் பெருக்கிப் பார்க்க வேண்டும். அதாவது 10 ஆண்டுகளுக்கு ஆகும் செலவை கணக்கிட்டுப் பார்க்க வேண்டும்.

அதாவது தினசரி 10 ரூபாய் செலவு செய்தால் 10 ஆண்டுகளில் எத்தனை ரூபாயாக இருக்கும் என்று கணக்குப் பார்க்கும்போது நமக்கு ஒரு தெளிவு பிறக்கும். அதன் பின் செலவு செய்வதைப் பற்றி ஒரு முடிவு எடுப்பது எளிதாக இருக்கும்.

பணக்கணக்கு:

செல்வத்திற்கு ஒரு சிறப்பு உண்டு.

உயிரற்ற பொருட்களில் வளரக் கூடியது.

உயிரற்ற பொருட்களில் குட்டி போடக் கூடியது.

– சுரேஷ் பத்மநாபன்

கீழே உள்ள அட்டவணையைக் கவனியுங்கள். நாம் ஒவ்வொரு முறையும் செலவு செய்யும் முன் இந்த அட்டவணையை ஒரு முறை பார்த்தால் நல்லது.

தினம் 10 ஆண்டுகளில் சேரும் 10ஆண்டுகளில் 12 சதவீத தொகை வட்டியுடன்

தினசரி இரண்டு டீ செலவு மிச்சம் செய்தால் 10 ஆண்டுகளில் கையில் 70 ஆயிரம் ரூபாய் இருக்கும்.

நேரக்கணக்கு

பணத்தைப் போல் நேரம் வளர்வதில்லை. குட்டி போடுவதில்லைதான். ஆனாலும் அதற்கு அதைவிட வேறு பல சிறப்புகள் உண்டு. வாழ்க்கை என்பதே நேரத்தால் ஆனது தானே. பணத்தால் புத்தகங்களை வாங்கலாம். ஆனால் படிக்க நேரம் ஒதுக்கினால்தான் பலன் கிடைக்கும். உடற்பயிற்சி கருவிகளை பணத்தால் வாங்கலாம். நேரம் செலவு செய்து உடற்பயிற்சி செய்தால் தான் பலம் கிடைக்கும்.

மேலும் ஒரு நாளின் ஒரு மணி நேரத்தின் உண்மையான மதிப்பு ஒரு மணி நேரமல்ல? பின் எப்படி?

இரண்டு மூட்டை நெல்லை அரைத்தால் கிடைப்பது ஒரு மூட்டை அரிசி. 10 பவுனில் தங்கச் சங்கிலி வாங்கினால் சேதாரத்துடன் பதினோரு பவுனுக்கு விலை கொடுக்க வேண்டும்.

இப்படி சேதாரம் போக மீதியாகும் நேரம் ஒரு நாளுக்கு (24 மணிக்கு) 10 மணி நேரம்தான் செயல்பாட்டு நேரம். உண்ணல், உறங்கல், உடுத்தல், குளித்தல், செய்தித்தாள் படித்தல், தொலைக்காட்சி பார்த்தல், நாடி வந்தவரை நலம் விசாரித்தல் என ஆன நேரம் போக மீதி இருக்கும் நேரம் தினசரி 10 மணிகளே.

இந்த பத்து மணிகளில் மாமூலான வேலைக்கு (Routine work) ஆகும் நேரங்கள் போக மீதமாகும் உச்சகட்ட நேரம் (Peak Hours) என்பது வெறும் 4 மணிகளே இருக்கும். ஆக ஒரு நாளைக்கு செயல்பாட்டு நேரம் 10 மணிகள். உச்சகட்ட நேரம் 4 மணிகளே.

நாம் வீணாக்கும் நேரத்தில் ஒரு மணி நேரம் மிச்சம் பண்ணினால் இந்த உச்ச கட்ட நேரத்தில் சேர்ந்து அது நமக்கு உச்ச கட்ட பலனை கொடுக்கும் என்பதை நாம் நன்கு நினைவில் வைக்க வேண்டும்.

ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மிச்சம் பண்ணினால் 10 ஆண்டுகளில்

3650 ஷ் 1 ‘ 2 வருடம் 7 மாதங்கள்

4

1/2 மணி நேரம் மிச்சம் பண்ணினால் 1 வருடம் 3 1/2 மாதங்கள்

10 நிமிடம் மிச்சம் பண்ணினால் 5 மாதங்கள் மீதமாகும்.

அது போலவே சில நிமிடங் களையும், சில ரூபாயையும் அலட்சியம் செய்யாமல் பயன்படுத்துவதால் வாழ்க்கை வளப்படும். இந்த 10 ஆண்டுகள் என்பது வாழ்நாளில் மிக நீண்ட கால அளவும் அல்ல, மிகக் குறைந்த கால அளவும் அல்ல. அது குறிப்பிடத்தக்க ஒரு மைல்கல்.

10 ஆண்டுகளுக்கு முன் நமக்கு இணையாக இருந்த அநேகரை இன்று நினைத்துப் பாருங்கள். சிலர் நம்மைவிட உயர்ந்த நிலையில் இருக்கலாம். இன்னும் சிலரைவிட நாம் உயர்ந்த நிலையில் இருக்கலாம்.

இனி ஒரு விதி செய்வோம்.

இந்த புத்தாண்டில் இருந்து அடுத்த பத்தாவது ஆண்டில் நாம் கால் பதிக்கும்போது எந்த நிலையில் இருப்போம்! சற்று கற்பனை செய்து பார்ப்போம். நமக்கு இணையாக நம்மோடு இருக்கும் சிலர் அன்று எட்டாத உயரத்திற்கு சென்றுவிடலாம். இல்லை நமக்கு இணையாக இருப்பவரைவிட நாம் மிக உயர்ந்த நிலையை அடைந்து விடலாம். நேரத்தையும் பணத்தையும் திட்டமிட்டு செலவு செய்வதில் இருக்கிறது வாழ்வின் உச்சநிலை. நமது உயரத்தை நாம் திட்டமிட்டு நாமும் உச்சத்தை அடைவோம். நலம் பெற்று, உயர்வு பெற்று வளமான வாழ்வு வாழ்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *