உள்ளே வாருங்கள். இது உங்கள் உலகம்!

உள்ளே வரும் ஒவ்வொருவருக்கும், ஒரு கப் உற்சாகம் உத்திரவாதம்!

வெல்லத் துடிக்கும் உள்ளங்களின் வாசிப்புக்கும் நேசிப்புக்கும் உரிய நமது நம்பிக்கை, பல்லாயிரக்கணக்கான இல்லங்களில் நம்பிக்கைச் சுடரேற்றி வருகிறது. விறுவிறுப்பான கட்டுரைகள் – வித்தியாசமான தகவல்கள் – வடிவமைப்பிலும் உள்ளடக்கத்திலும் தனித்து நிற்கும் தரம் சுயமுன்னேற்ற நிபுணர்களின் சிறப்பு மிக்க படைப்புகள் – நரம்புகளை மீட்டும் நம்பிக்கைக் கவிதைகள் என்று சர்வதேசத் தரத்தில் தயாராகும் தமிழ் மாத இதழ் இது. உலகறிந்த பேச்சாளராய், உத்வேகம் தரும் எழுத்தாளராய் பன்முக ஆளுமையும் இளைஞர்கள்பால் தோழமையும் கொண்ட ‘கலைமாமணி’ மரபின்மைந்தன் முத்தையா இதன் ஆசிரியராகவும் முதன்மைப் பங்குதாரராகவும் திகழ்கிறார். சுயமுன்னேற்றப் படைப்புலகத்தோடு நெருக்கமான தொடர்பும் அனுபவமும் கொண்ட திரு. கி.வேணுகோபால், இந்த இலட்சிய இதழின் நிர்வாக ஆசிரியராகவும் பங்குதாரராகவும் விளங்குகிறார்.

செயல் துடிப்புமிக்க அலுவலர்களின் நேர்த்தியான செயல்திறனில் வடிவாகும் நமது நம்பிக்கை, தமிழகமெங்கும் வெற்றிவலம் வருகிறது. மனிதர்களுக்குள் மறைந்து கிடக்கும் ஆற்றலை வெளிக்கொணர ‘சிகரம் உங்கள் உயரம்’ என்ற பெயரில் மனிதவள மேம்பாட்டு இயக்கத்தையும் நாடெங்கும் முழுவீச்சில் நடத்தி வருகிறது நமது நம்பிக்கை. குழந்தைகள் மத்தியில் தலைமைப் பண்பை வளர்க்க ‘வளரும் சிகரங்கள்’, இளைஞர்களுக்கு இலக்கை உணர்த்த, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து வழங்கும் ‘வல்லமை தாராயோ’, ஆண்டு தோறும் ஆர்வலர்கள் கட்டணம் செலுத்தி ஆர்வமுடன் பங்கேற்கும் ‘வெற்றி வாசல்’ ஆகியவை நமது நம்பிக்கை மாத இதழின் சிலிர்ப்பூட்டும் சிறப்பம்சங்கள்.

உங்களை அன்போடு வரவேற்கிறோம்…
வித்தியாசமான வாசிப்பு அனுபவத்திற்கு மட்டுமல்ல…
வெற்றி நோக்கி இலட்சியப் பயணத்தில் இணைந்து கொள்ள!

நமது நம்பிக்கை
இது வெற்றிகளின் தலைவாசல்.