ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் சேரப் போனார் ஒரு மாணவர். “எந்தப் பிரிவு வேண்டும்” என்று கேட்டபோது ‘தியாலஜி’ என்றார். அங்கிருந்த எழுத்தர் காதில் ‘ஜியாலஜி’ என்று விழுந்தது. சரியாக கவனிக்காமல் கையொப்பமிட்டுத் தந்துவிட்டார். உண்மை தெரிந்தது. மாற்றிக் கொள்ளத் தயங்கினார். ஜியாலஜி பிரிவிலேயே சேர்ந்து படித்தார்.
படித்துத் தங்கப் பதக்கமும் பெற்றார். கவனக் குறைவால் விருப்பப்பட்ட துறை கிடைக்காத போது கிடைத்த துறையையே விரும்பத் தொடங்கினார். வாழ்க்கை நடத்தும் சூதாட்டங்களை வெற்றி கொள்ளும் வழி இதுதான்.
Leave a Reply