நமக்குள்ளே

நமது நம்பிக்கை ஜனவரி இதழில் வல்லமை தாராயோ ஸ்டாலின் குணசேகரன் அவர்களது உரை வீச்சு மிக அருமை. கிருஷ்ணா அவர்களின், “ஒபாமா சொல்லும் மாற்றம் உங்கள் வாழ்விலும்தான்” எனும் கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. “தவறுகள் எதனால் நிகழ்கின்றன” என்ற பிரதாபனின் கட்டுரை தவறுகளை திருத்திக் கொள்ள உபயோகமாக இருந்தது. நமது நம்பிக்கை மேலும் சிறப்படைய எனது வாழ்த்துக்கள்.

திரு. ரஹ்மான், சென்னை.

நமது நம்பிக்கை ஜனவரி 2009 தலையங்கம் “வதந்தியை முடக்கு” என்ற வேண்டுகோள் மூலம் “பொறுப்(பு)” பின் மகத்துவம் நினைவூட்டுவது மிகச்சரி. பிறநாடுகளில் மதத்திணிப்பு இல்லை என்பது மிகையான வாதம். திணிப்பை வலியுறுத்தாத மதம் இந்துமதம் எனலாம்.
திரு.இசட்சான், திருப்பூர்.

ஜனவரி 2009 நமது நம்பிக்கை புத்தகத்தின் ஒவ்வொரு தலைப்பின் கருத்தும் அருமை. காட்டுயானையை கண்டு ஓடுகிறோம். கோயில் யானையை பார்த்து காசு கொடுத்து ஆசீர்வாதம் பெறுகிறோம். மனிதர்கள் ஒவ்வொருவரும் அன்பாளர்களாக பண்பாளர்களாக இருந்தால் நாம் வணங்கப் பெறுவோம். மரபின்மைந்தன் அவர்களின் கடைசிப்பக்க கவிதையை ஒவ்வொருவரும் படித்து பயன் பெறவேண்டும்.
திரு.இலக்குமணப் பெருமாள், மணப்பாறை.

வாழ்வின் மூன்று சக்திகள் பணம் – பரிவு – பக்குவம் என்பதை அன்றாட வாழ்வின் நடைமுறைகளை ஒட்டி எடுத்துரைத்தது சிறப்பு. எதனால் தவறுகள் ஏற்படும் என்பதை பிரதாபன், தவறான தேர்வுகள், தவறான கண்ணோட்டம், தவறான இயங்குமுறை, தவறான முடிவுகள் என்று விளக்கியது முற்றிலும் சரியானதுதான். பத்தாண்டுகளில் வளம் பெருக்குவது எப்படி என சௌந்தரராசன் விவரித்ததை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு செயலைச் செய்ய சரியான அணுகுமுறை தேவை என சிநேகலதா கூறியது முக்கியமான செய்தி. தோல்வி என்பது அபிப்பிராயம்தான் என்பது முற்றிலும் உண்மை.
திரு.இரா.தியாகராஜன், இலால்குடி.

நமது நாட்டின் இளைஞர்களின் ஒளிமயமான எதிர்கால வாழ்க்கை பல காரணங்களால் வீணடிக்கப்பட்டு திசைமாறிப் போய்க் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த நிலையில் நமது நம்பிக்கை இதழ் இளைஞர்களின் கலங்கரை விளக்கமாய் திகழ்கிறது.
திரு.உதயா, கோவை.

ஆசிரியரின் அட்டைப்படக் கட்டுரை மிக அருமை. மூன்று சக்திகளை விளக்கிய விதம் என்னை மிகவும் கவர்ந்தது. விழுவது எழுவதற்கே என்ற தி.க.சந்திரசேகரன் அவர்களது கட்டுரை காட்சி காட்சியாக நமக்கு பிரித்து விளக்கிய விதம் நன்றாக இருந்தது. நமது நம்பிக்கை இதழ் என் வாழ்வின் வழிகாட்டி. இதழ் மேலும், மேலும் வளர எனது வாழ்த்துக்கள்.
திரு.கிருபாகரன், சேலம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *