கிரேக்க நாட்டில் ஒரு கதையுண்டு. சிஸிபஸ் என்ற ஒருவனை, மலைக்கு மேல் ஒரு கல்லைக் கீழிருந்து உருட்டிச் செல்லுமாறு ஒரு தேவதை பணித்தது. கடனே என்று சிஸிபஸ் உருட்டிச் செல்வான். உச்சிக்குப் போனதும் அந்தக் கல் உருண்டு கீழே வந்துவிடும். இது தொடர்ந்தது. கொஞ்ச காலத்திற்குப் பிறகு சிஸிபஸ் ஒரு விழிப்புணர்வைப் பெற்றான்.
தான் விருப்பமில்லாமல் யாரோ சொன்ன வேலையைச் செய்வதை உணர்ந்தான். கல்லை உச்சிக்கு உருட்டிப் போவதில் இருக்கும் சந்தோஷத்தை, சாகசத்தை உணர்ந்து மகிழ்ச்சியாக உருட்டிக்கொண்டு போனான். இந்த முறை உச்சிக்குப் போனதுமே அந்தக் கல் உருளாமல் நின்றது. விருப்பத்தோடும் விழிப்புணர்வோடும் செய்கிற வேலையில் வெற்றி வந்தே தீரும்.
Leave a Reply