அந்த மனிதருக்கு நண்பர்கள் உண்டு. ஆனால் அவர்கள் சொல்வதை அவர் கேட்பதில்லை. புதிதாக வீடு கட்டியிருந்தார். புதுமனை புகுவிழாவிற்கு நண்பர்களை அழைத்திருந்தார். எல்லா நண்பர்களுமே அந்த மனிதரின் அழகிய புகைப்படம் ஒன்றை பெரிதாக்கி சட்டமிட்டு அன்பளிப்பாக ஆளுக்கொன்றை அளித்தார்கள். காரணம் கேட்ட போது நண்பர்கள் சொன்னார்கள், “உனக்கு நிலைக்கண்ணாடியைப் பரிசளிக்க
நினைத்தோம். ஆனால் உள்ளதை உள்ளபடி காட்டுவது உனக்குப் பிடிக்காது. எனவே புகைப்படங்களைப் பரிசளித்துவிட்டு, உன் வீட்டில் உள்ள கண்ணாடிகளைக் கழற்றிச் செல்லத் தீர்மானித்தோம். கற்பனை உலகில் உண்மைகளை எதிர்கொள்ளாமல் உன் விருப்பம் போல வாழலாம்” என்றார்கள். அதிர்ச்சி வைத்தியம் பயனளித்தது. விமர்சனங்களை ஏற்கத் தொடங்கினார் அவர்.
Leave a Reply