அந்த நாத்திகர் வனப்பகுதியில் நடந்தார். காலைச் சூர்யோதயத்தைக் கண்டு ரசித்தார். பறவைகளின் இசை கேட்டு சிலிர்த்தார். இயற்கை அழகில் லயித்தார். எதிரே ஒரு சிங்கம் பாய்ந்து வந்தது. கடவுள் உடனே வந்து காப்பாற்றினார். இதை ஒரு பக்தர் கேள்விப்பட்டு கடவுளிடம் கோபித்துக் கொண்டார். “காலமெல்லாம் கடவுள் இல்லை என்று சொன்ன மனிதனை நீங்கள் ஏன் காப்பாற்றினீர்கள்?” கனவில் வந்த கடவுள் சொன்னார், “அந்த
மனிதன் நான் படைத்த பிரபஞ்சத்தின் அழகை ரசித்தான். அதில் லயித்தான். இயற்கை அழகில் நான் இருக்கிறேன். கடவுள் என்ற கருத்தை ஒப்புக்கொள்ளாத மனிதன் என் இருப்பை அங்கீகரித்ததால் அவனை நான் காத்தேன்” என்றார். உலகின் அற்புதங்கள் ஒவ்வொன்றிலும் உள்ள தன்மையே கடவுள்.
Leave a Reply