வாஷிங்டனில் வீதியோரமாய் அந்த வயலின் கலைஞர் வாசித்துக் கொண்டிருந்தார். நாற்பத்தைந்து நிமிடங்கள். அற்புதமான இசை. நின்று பார்த்தவர்கள் ஆறுபேர்கள் மட்டுமே. அவர்களும் கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டே நடந்தார்கள். நின்று பார்க்க விரும்பிய குழந்தைகளை, நேரமாகி விட்டதென்று பெற்றோர் இழுத்துச் சென்றார்கள்.
அவர் முன் விழுந்த தொகை 32 டாலர்கள். அமர்ந்திருந்த இசைக் கலைஞர் எழுந்த பிறகுதான் தெரிந்தது, அவர் புகழ்பெற்ற இசைக்கலைஞர் ஜோஷ்வாபெல் என்பது. வாஷிங்டன் போஸ்ட் ஏற்பாடு செய்திருந்த அதிர்ச்சி வைத்தியம் இது. அடையாளம் தெரியாத திறமைகளை அலட்சியம் செய்வது பெரும் தவறென்று புரிந்தது பலருக்கும்.
Leave a Reply