உண்மையாய் இருங்கள். மென்மையாய் இருங்கள்.
ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாய் இருங்கள்.
இரக்கம் காட்டுங்கள். இறங்கிப் போகாதீர்கள்.
நம்பகமானவராய் இருங்கள். நட்பானவராய் இருங்கள்.
உதவி செய்யத் தயாராய் இருங்கள்.
மற்றவர்களின் பார்வையையும் மனதில் கொள்ளுங்கள்
தவறுகள் நேர்கையிலும் பதறாமல் இருங்கள்
சோர்வு ஏற்படும்போது “சட்”டென்று மீளுங்கள்.
தவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயாராய் இருங்கள்.
அன்பெனும் சாவியால் ஒவ்வொரு நாளையும் திறந்திடுங்கள்.
ஏற்றத்தாழ்வுகள் எதிர்பார்த்தே பயணம் தொடங்குங்கள்
சவாலான நேரங்களில் சரியாக இருங்கள்.
தவிப்பான நேரங்களில் தடுமாறாமல் இருங்கள்.
புண்பட நேர்ந்தாலும் புன்னகையுடன் இருங்கள்
பிறர் புரிந்து கொள்ளும்வரை பொறுமையாய் இருங்கள்.
நன்மைகள் நிச்சயம். நம்பிக்கையாய் இருங்கள்.
Leave a Reply