கால்பந்து மைதானத்தில் இரு நாடுகளுக்கிடையே போட்டி. அரங்கம் நிரம்பி வழிந்தது. இரு அணிகளும் மாற்றி மாற்றி கோல் போட்டுக் கொண்டிருந்தன. இருவர் வெற்றிக்கும் ஒருவர் ஆர்ப்பரித்து கைதட்டி ஊக்குவித்துக் கொண்டிருந்தார். அவர் எந்த நாட்டை ஆதரிக்கிறார் என்பதில் கூடியிருந்தவர்களுக்குக் குழப்பம். அவரிடமே கேட்டார்கள். அவர் சொன்னார், “நான் எல்லா
மனிதர்களுக்கும் பொதுவானவன். நாடு என்கிற எல்லை எனக்கில்லை. மனிதகுலம் தன் திறமையை எங்கெல்லாம் வெளிப்படுத்துகிறதோ அங்கெல்லாம் நான் இருக்கிறேன். அவர்களைப் பாராட்டுவதன்மூலம் என்னையே பாராட்டிக் கொள்கிறேன் ” என்றார். அவர் கடவுள் என்பதை யாரும் அறியவில்லை. மனிதனின் திறன் வெளிப்படுவதே கடவுளின் தரிசனம்.
Leave a Reply