“கொண்டாடப்படுவதற்கு திறமையாளர்கள் இல்லாத சமூகம் வறுமையுடையது. கொண்டாடுகிற மனமுள்ளவர்கள் இல்லாத சமூகம் வெறுமையுடையது” என்னும் வரிகளில் சமூகத்தின் நாடித்துடிப்பினை நயம்பட விவரித்த கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் உரை வெகு சிறப்பு.
திரு.சூரியதாஸ், சிலட்டூர்
ஏற்றம் தரும் கவிதை உண்டு நம்பிக்கையில். பலரைச் சொல்ல பக்கம் இல்லை, கவிஞர் மரபின்மைந்தன் முத்தையா சொல்லிய கருத்து என்றும் துளிர்விடும் இளம் குறுத்துக்கள் இன்றும் உண்டு நம்பிக்கையில் நமது நம்பிக்கையில்.
திரு.கண்ணன், கரூர்.
சந்திராயன் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாத்துரையும் கவிஞர் வைரமுத்து அவர்களும் கூறிய கருத்துக்கள் அனைத்தும் ஒவ்வொரு கிராமத்து இளைஞர்களின் முன்னேற்றத்துக்கு தூண்டுதலாக அமைந்த விதம் அருமை. “வெற்றி மீது வெற்றி வந்து” என்னும் தலைப்பில் சுகி சிவம் அவர்களின் பேச்சு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.
திரு.துரைராஜ், சேலம்.
நமது நம்பிக்கை இதழின் வடிவமும் உள்ளடக்கமும் நிறைவாய் உள்ளது. எழுத்துக்களிலும் கூறும் கருத்துக்களிலும் வலிமை உள்ளது. இன்றைய தலைமுறையின் சில மனோபலவீனங்களை மாற்றவும் நம்பிக்கை விதைகளைத் தூவும் இந்த இதழின் பணிகள் மேன்மேலும் சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
திரு.செல்வராஜ், சரவணம்பட்டி.
Leave a Reply