அந்தக் காலம் இந்த மாதம்

மே 1

1886ல் சிகாகோவில் நடைபெற்ற தொழிலாளர் வேலை நிறுத்தத்தில் நடந்த தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர். இதைக் குறிக்கும் விதமாய் 1889ல் கூடிய சர்வதேச தொழிலாளர் மாநாடு ஆண்டு தோறும் அதே தேதியில் கூடுவதென்று முடிவெடுத்தது. 1904ல் ஆம்ஸ்ட்ரடாமில் கூடிய சர்வதேச சோஷலிச மாநாடு, ஆண்டுதோறும் மே 1 தொழிலாளர் தினமாகக் கடைப்பிடிக்கப்படும் என்று அறிவித்தது.

நியூயார்க்கில் ஜார்ஜ் ஈஸ்ட்மேன், கோடாக் காமிராவை அறிமுகம் செய்தார். “பொத்தானை அழுத்துங்கள் – மற்றவற்றை நாங்கள் செய்கிறோம்” என்பது அவர் தந்த விளம்பரம். 25 டாலருக்கு இந்தக் காமிரா விற்பனையானது. முதன் முதலாக காமிராவைத் தொட்டவர்களும் எளிதில் படம் எடுக்கும் விதமாக இது வடிவமைக்கப்பட்டது. ஒரு புகைப்படச் சுருளில் நூறு புகைப்படங்கள் எடுக்க முடியும்.

1888 மே 7

நியூயார்க்கில் ஜார்ஜ் ஈஸ்ட்மேன், கோடாக் காமிராவை அறிமுகம் செய்தார். “பொத்தானை அழுத்துங்கள் – மற்றவற்றை நாங்கள் செய்கிறோம்” என்பது அவர் தந்த விளம்பரம். 25 டாலருக்கு இந்தக் காமிரா விற்பனையானது. முதன் முதலாக காமிராவைத் தொட்டவர்களும் எளிதில் படம் எடுக்கும் விதமாக இது வடிவமைக்கப்பட்டது. ஒரு புகைப்படச் சுருளில் நூறு புகைப்படங்கள் எடுக்க முடியும்.

மே 7 1946

இதே தேதியில், சோனியின் தாய் நிறுவனமான டாட்சுகோ, டோக்கியோவில் தோன்றியது. தொழில்நுட்பத்தில் ஆழமும் ஆர்வமும் கொண்ட பொறியாளர்கள், தங்கள் மனோ தர்மத்தின்படி இணைந்து பணியாற்ற வாய்ப்பளிப்பதே இந்த நிறுவனத்தின் முக்கிய இலட்சியம் என்று அறிவித்தார், இதன் நிறுவனர்களில் ஒருவரான மஸாரு இபூகா.

1893 மே 8

தலைவலி மற்றும் முந்தையநாள் மது போதையின் மிச்ச தலை சுற்றலுக்கு மருந்தாக அட்லாண்டாவில் ஜேகப் பார்மசியில் ஒரு திரவம் பொது விற்பனைக்கு வந்தது. அதுதான்…. கோககோலா!!

மே 10 1893

ஏற்றுமதியில் பழங்களுக்கு வரிவிலக்கு, காய்களுக்கு வரிவிதிப்பு என்றிருந்த காலம். மேற்கிந்தியாவிலிருந்து அமெரிக்காவில் ஒரு கார்கோ நிறைய தக்காளி வாங்கிய ஜான் நிக்ஸ் தனக்கு விதித்த வரியை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், இந்த நாளில்தான் தீர்ப்பு வந்தது. தக்காளி காயா? பழமா? உச்ச நீதிமன்றத் தீர்ப்பு இதோ! “தாவரவியல் அடிப்படையில் பார்த்தால் தக்காளி ஒரு பழம்தான். ஆனால் மக்கள் அதை காய்கறியாகப் பயன் படுத்துகிறார்கள். எனவே தாவரவியல் அடிப்படையில் அது பழம். சட்டப்படி பார்த்தால் காய்!”. தலை சுற்றுகிறதா? தக்காளி ஜுஸ் குடிங்க!

1943 மே 18

தன்னுடைய மகன் எட்ஸெல் மரணப் படுக்கையில் இருக்கும் செய்தி ஹென்றி ஃபோர்டுக்கு வருகிறது. மகனைப் பார்க்க மறுத்துவிட்டு, ஃபேர்லேன் காடுகளில் சுற்றித் திரிகிறார் ஹென்றிஃபோர்ட். எட்ஸெல்லின் இல்லத்தில் இருந்த மதுப்புட்டிகள் அனைத்தையும் உடைத்தெறியக் கட்டளையிட்டார் ஹென்றிஃபோர்ட். ஒருவாரம் கழித்து கோமா நிலையிலேயே எட்ஸெல் இறந்தார், அவரது மரணத்துக்கான காரணங்களாகப் பட்டியலிடப்பட்டவை, வயிற்றுப் புற்றுநோய், அல்சர், அப்பா கொடுத்த உளவியல் ரீதியான தொந்தரவுகள். காய்ச்சலால் மரணம் நிகழ்ந்தது. காய்ச்சல் ஏற்படக் காரணம் – அப்பா வற்புறுத்திக் கொடுத்த காய்ச்சாத பால் மூலம் ஏற்பட்ட கிருமித் தொற்று!!

1938 மே 26

ஜெர்மனியில் மிட்டில்லெண்ட் கேலை என்கிற பகுதியில், வோக்ஸ் வேகன் கார் நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்தக் காரின் வடிவமைப்பில் பல அம்சங்கள் ஃபோர்டு நிறுவனத்தைப் பின்பற்றியிருந்தன. எல்லா ஜெர்மனியனுமே இந்தக் காரை வாங்கும்படி விலை அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்ட அழைக்கப்பட்ட புண்ணியவான்……. வேறு யார்? அடாஃப் ஹிட்லர்தான்!!

1985 மே 31

தன் நிறுவனமாகிய ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸில், தன் அதிகாரங்களை இழந்தார் ஸ்டீவ் ஜாப்ஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *