BPO துறை மீண்டும் மலரும்


Atom Multi Media திரு. மதன் மோகன் அவர்களுடன் நேர்காணல்

உங்களைப் பற்றி?

என் பள்ளி படிப்பு முழுவதுமே ஊட்டியில்தான். நான் இளநிலை வணிகவியல் பட்டத்தை, ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் பெற்றேன். எனது எம்.பி.ஏ. பட்டப்படிப்பை பாரதியார் மேலாண்மை பள்ளியில் பயின்றேன். முதுகலை பட்ட படிப்பில் சேர்ந்த காலம்

தொட்டே என்னுடைய முழு கவனமும் பயிற்சியாளராக வரவேண்டும் என்பதே. அதற்கு இதுவே சரியான துறை என்று தேர்ந்தெடுத்தேன்.

நீங்கள் இந்த துறையில் வளர்ந்த நாட்கள் பற்றி…

எனக்கு மிகச்சிறந்த தொழிலதிபர் ஆக வேண்டும் என்ற எண்ணம் தோன்றிய போதெல்லாம் சரியான அனுபவமும் பொருளாதார குறைபாடு காரணமாக என்னால் துவங்க இயலவில்லை. இருந்தும் துவக்க காலத்தில் ஐஇஐஇஐ புரொடன்சியல், சிட்டி பினான்சியல், பினலின் போன்ற நிறுவனங்களில் பல ஆண்டுகள் வேலை பார்த்திருக்கிறேன். இதற்கிடையே நான் விரும்பியவாறு வார விடுமுறை நாட்களில் நானும் என் நண்பரும் சேர்ந்து கல்லூரி மாணவர்களுக்கு குறிப்பாக எம்.பி.ஏ. பயிலும் மாணவர்களுக்கு பயனளிக்கும் விதமாகவே எங்கள் பயிற்சி வகுப்புகள் அமையும். நான் சிட்டி நிறுவனத்தில் வேலை பார்த்த பொழுதுதான் மல்டி மீடியாவின் தேவைகள் புரிந்தது. ஆனால் எம்.பி.ஏ. பட்டப் படிப்பில் மல்டி மீடியாவிற்கான செய்முறை பயிற்சி இல்லாததால் நான் அந்தத் துறையை கற்றுக் கொள்ளவும் பிறருக்கு பயிற்சி அளிக்கவும் ஆரம்பித்தேன்.

பி.பி.ஓ. துறையை பொருத்தமட்டில் அது தற்காலிக வேலை வாய்ப்பை உருவாக்கித் தரும் துறையாகத்தான் இருக்கிறது. அது பற்றி உங்கள் கருத்து….

ஆடஞ துறை தற்காலிகமானது என்பது தவறான கருத்து. பெரிய பெரிய நிறுவனங்கள் இருக்கும் வரை இந்தத் துறை நிரந்தரமானதாக இருக்கும். நாம் என்றும் நம் சேவை குறித்த நேரத்தில் விரைந்து செயல்படும் திறன் என அனைத்து அம்சங்களும்தான் இந்தத் துறையை நிரந்தரமாக்குகின்றன. குறிப்பாக இது தற்காலிகமானது என்ற கருத்தை உடைத்தெரிந்து இது நிரந்தரமானது என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவது இந்தத் துறையைச் சார்ந்த தொழிலாளர்களால் மட்டும்தான் முடியும்.

இந்தத் துறையைச் சார்ந்தவர்களின் வளர்ச்சி….?

இந்தத் துறையில் வளர்ச்சிமிக அதிகமானது என்பதைக் காட்டிலும் மிக வேகமானது. இந்தத் துறையை அரசாங்க வேலை வாய்ப்புடன் ஒப்பிட்டுப் பார்ப்பது சிறந்த அணுகுமுறையாகும். இந்தத் துறையை தொழில்நுட்ப துறையுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது தவறான அணுகுமுறை. வளர்ச்சி என்று நீங்கள் எதைக் கருதுகிறீர்கள். பெற்றோரை, உடன் பிறந்தோரை, மனைவி மக்கள் மற்றும் நண்பர்களை மகிழ்ச்சியாக வைப்பதே வளர்ச்சியின் அடுத்த படிநிலை. இந்தத் துறையில் கிடைக்கும் மரியாதையும், பொருளாதாரத் தேவையும் உங்களுக்கு நிச்சயம் அந்த வளர்ச்சியைக் கொடுக்கும். அது மட்டுமன்றி உங்களிடம் நல்ல திறன், வேலையில் கவனம், முழு அர்ப்பணிப்பும் சிறிது பொறுமையும் இருக்குமேயானால் இந்தத் துறையில் வளர்ச்சி நிச்சயம்.

பெரும்பாலான ஆடஞ வாடிக்கையாளர்கள் (Client) அமெரிக்காவைச் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். தற்போது அனைத்து அவுட்சோர்சிங்கையும் அமெரிக்கா தடுத்து வருகிறது. இது ஆடஞ துறையை பாதிக்காதா?

மீண்டும் நான் சொல்வது அதுதான். அமெரிக்கர்கள் நம் நாட்டை நாடி வருகிறார்கள் என்றால் அதற்கு மலிவான ஊதியத்திற்கு கிடைக்கக்கூடிய தொழிலாளர்கள் (Cheap Labour) மட்டுமே முக்கிய காரணம் இல்லை. நம்மிடம் இருக்கக்கூடிய தரம். தரம் இல்லாமலேயே அவர்கள் நாட்டிலேயே வேலையை கொடுத்து நஷ்டமடைவதைக் காட்டிலும் நம்மிடம் கொடுத்து லாபமடையத்தான் பார்ப்பார்கள். அந்த வகையில் அதிபரே சொன்னாலும்கூட நம்மிடம் இருக்கும் தரம், சேவை, குறைவான செலவால் BPO -க்கு பாதிப்பு இல்லை.

இந்தத் துறையில் வேலை பார்த்து வேறு வேலை தேடும்பொழுது BPO துறையில் வேலை செய்ததை முன் அனுபவமாக ஏற்க மறுக்கிறார்களே ஏன்? இதனை எப்படி எதிர்கொள்வது?

படிக்கிற காலத்திலேயே நாம் என்னவாக வரவேண்டும் என்கிற தெளிவு மாணவர்களுக்கு இருக்க வேண்டும். பொறியாளராக வேண்டும், மருத்துவராக வர வேண்டும், கணக்கராக வேண்டும் என்ற குறிக்கோள் இருந்தால் அதை அடைவதற்கான முனைப்புடன் இருங்கள். பணம் கிடைக்கிறது என்று குறிக்கோளை மறந்து இந்தத் துறையை தேர்ந்தெடுப்பவருக்குத்தான் இந்தப் பிரச்சனை. பெரும்பாலும் இந்தத் துறையை விட்டு வேறு வேலை தேட முக்கியமாக இரண்டு காரணங்கள்தான் இருக்க முடியும். ஒன்று இரவு நேரப் பணி. மற்றொன்று பணியில் நிறைவு இல்லாதது. ஆனால், இவை இரண்டும் காலப் போக்கில் பழக்கப்பட்டுவிடும். அப்பொழுது வேறு வேலை தேட வேண்டிய அவசிய நிலையே இல்லாது போகும்.

இந்தத் துறைக்கு ஆங்கிலம்தான் அடிப்படைத் தகுதி என்றால் ஆங்கிலம் சரளமாக பேச முடியாத இளைஞர்களுக்கு இதில் எந்தளவுக்கு வாய்ப்பு (ள்ஸ்ரீர்ல்ங்) இருக்கிறது?

ஆங்கிலம் தெரிந்தவருக்கு எல்லாம் தெரியும் என்பது அர்த்தமில்லை. நாம் சொல்ல நினைப்பதை தெளிவாய் நம் வாடிக்கையாளருக்கு (மந இப்ண்ங்ய்ற்) சொல்ல வேண்டும் என்பதுதான் அடிப்படை நோக்கம். ஆங்கிலம் சரளமாகப் பேச முடியாத ஏராளமான இளைஞர்கள் இதற்குப் பின்னால் செயல்படுகிறார்கள். Non-voice, Internet Research போன்ற துறைகளில் அதிக வாய்ப்புள்ளது. எனது அலுவலகத்திலே அதுபோன்ற இளைஞர்களுக்கு வாய்ப்பளித்திருக்கிறேன். அவர்கள் தயாரிக்கும் கோப்புகள்தான் அமெரிக்கப் பேராசிரியர்கள் அங்கே வகுப்புகள் எடுக்கப் பயன்படுத்துகிறார்கள்.

இப்பொழுது தொழில்நுட்பத் துறையில் இருக்கும் பின்னடைவால் இன்றைய மாணவர்கள் இந்தத் துறையை தேர்ந்தெடுக்க தயங்குகிறார்கள். அவர்களுக்கு நீங்கள் சொல்ல நினைப்பது?

வியாபாரத்தில் லாபம் நஷ்டம் இருப்பது போலத்தான் இதுவும். இந்தத் துறையிலும் ஏற்றத் தாழ்வு என்பது இருக்கும். ஆனால், இது தற்காலிகமானதுதான். மீண்டும் இதில் வளர்ச்சி நிலை உருவாகும். இதற்கிடையில் துறையில் பின்னடைவு என வருந்துவதைக் காட்டிலும் இதுதான் இளைஞர்களுக்கு தொழில் துவங்க சரியான தருணம், தற்பொழுது ஏராளமானர்கள் சுயதொழில் துவங்க பொருளாதார ரீதியாக உதவ முன் வருகிறார்கள். பின்னடைவையும் சரியான பாதையில் எடுத்துச் சென்றால் வெற்றி நிச்சயம்.

இந்தத் துறைக்கு வயது ஒரு தடையா? 40 வயதிற்கு மேல் இந்தத் துறையில் தாக்குப் பிடிக்க முடிவதில்லையே?

நிச்சயமாக இல்லை. ஓர் நிறுவனத்திற்கு அனுபவம் மிக முக்கியம். இளைஞர்களின் வேகம், துடிப்பு என அனைத்தைக் காட்டிலும் நிச்சயம் ஒரு அனுபவசாலி தேவை. அந்த வகையில் இந்தத் துறைக்கு வயது ஒரு தடையல்ல. புதிதாக சிந்திக்கக் கூடிய, கடினமான நேரங்களில் சரியான முடிவெடுக்கும் மனிதர்கள் எந்த வயது வரையும் நிலைத்து நிற்கலாம்.

இந்தத் துறையின் வளர்ச்சி மிக முக்கியமான நகரங்களில் மட்டும்தான் காண முடிகிறது. இதை கிராமப்புற இளைஞர்களுக்கு கொண்டு சேர்க்க நீங்கள் ஏதேனும் முயற்சி எடுத்துள்ளீர்களா?

நாங்கள் பயிற்சி அளிக்க செல்கிற அனைத்து கல்லூரிகளும் கிராமப்புற கல்லூரிகள் தான். நகரத்தில் இருக்கும் இளைஞர்களைக் காட்டிலும் இவர்கள் மிகவும் புதுமையாக சிந்திக்கவும் செயல்படவும் கூடியவர்கள். நகர இளைஞர்கள் மத்தியில் தங்களை நிலை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் (passion)தான் அவர்களை மேலும் மெருகேற்றுகிறது. ஆனால், மிகப் பெரிய நிறுவனங்கள் இவர்களை நியமனம் செய்ய முன் வருவதில்லை. இதற்காக நாங்கள் ஒரு கணக்கெடுப்பு (survey) நடத்த உள்ளோம். பிறகு அவர்களுக்கு வாய்ப்பு அளிப்பதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்வேன். இதில் நான் நஷ்டமடைந்தாலும் நல்ல ஒரு பாடத்தைக் கற்றுக்கொண்டதாகவே கருதுவேன்.

இந்தத் துறையை பற்றிய ஏராளமான விமர்சனங்கள் வருகிறதே? உதாரணமாக கலாச்சாரம், உடல் நிலை பாதிப்பு போன்று……. இதற்கு உங்கள் கருத்து….

விமர்சனங்கள் எப்பொழுதும் வரவேற்கத்தக்கது. உடல் நிலை பாதிப்பு என்றால் உதாரணமாக நீங்கள் ஒரு தொழிற்சாலையில் வேலை பார்க்கிறீர்கள் அதைக் காட்டிலுமா இந்தத் துறையில் உடல்நலம் பாதிக்கிறது. இங்கே எனக்கு சற்றே தளர்வு வந்தாலும் இங்கே இருக்கும் உணவுக்கூடம் (ஸ்ரீஹச்ங்ற்ங்ழ்ண்ஹ) செல்லலாம். சிறிது நேரம் ஓய்வு எடுக்கலாம். சிலருக்கு இரவு நேரப் பணி ஒவ்வாது போகும். ஆனால், காலப்போக்கில் இது பழக்கப்பட்டுவிடும். கலாச்சாரம் என்று கூறும் பொழுது இந்தத் துறையைச் சார்ந்த அனைத்து வாடிக்கையாளரும் வெளிநாட்டவர்கள். அவர்கள் கலாச்சாரத்தை நாங்கள் மதிக்கிறோம். அதற்காக நாங்கள் மாறிவிட்டோம் என்பது பொருள் அல்ல..
………………….
இந்தத் துறையில் வெற்றி நிச்சயம். இதுமட்டுமன்றி எந்த ஒரு மாணவர்களுக்கும் பயிலரங்குகள் பயிற்சிகள் அளிக்க நான் தயாராக உள்ளேன் என்று திரு. மதன்மோகன் நேர்காணலை முடித்துக் கொண்டார்.
-கனகலக்ஷ்மி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *