நமக்குள்ளே

மே – 2009 நமது நம்பிக்கை அட்டை சுவாமி விவேகானந்தரைத் தாங்கி, “விவேகானந்தர் காட்டும் வெற்றிப்பாதை” என்ற தலைப்புடன் காண்போர் அனைவரையும் கவரும் வண்ணம், சிந்திக்கும் வண்ணம் அமைந்து இருந்தது. மே மாதச் சூழலில் பாராளுமன்ற பிரதிநிதிகள் விவேகானந்தர் காட்டும் வெற்றிப்பாதையில் தங்களின் சேவைகளைத் தொடர ஆரம்பித்தால்

நம்நாடு நல்ல பாதையில் செல்லும். நாம் அனைவரும் இந்தியத் தாயின் சகோதர சகோதரிகளாக வாழமுடியும். நம்மிலே தீண்டாமைகளும், தீவிரவாதங்களும் இருக்காது. பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.
லூ. பீட்டர், ஆசிரியர், மதுரை – 18.

நமது நம்பிக்கை மாத இதழ் படித்தேன். என்ன அருமையான, தித்திக்கும் வாழ்க்கைத் தத்துவத்தை யாதார்த்தமான வரிகளில் படித்து ஆச்சர்யம் அடைந்தேன். என்னை மிகவும் கவர்ந்தது த.ராமலிங்கம் எழுதிய தொடர் “நினைவு நல்லது வேண்டும்”. இதனை பலமுறை படித்து ரசித்தேன். மனிதன் எந்தச் சூழ்நிலையிலும் முன்னுக்கு வரலாம் என்ற தத்துவத்தை மிக அழகாக, அற்புதமாக எழுதியமை கண்டு வியந்தேன். மிக்க நன்றி.
அனந்த பத்மநாபன், சேலம்.

விவேகானந்தரை புத்தம் புதிய கோணத்தில் பார்த்தபோது, எங்களுக்கு உண்டான அளவில்லா பக்தியும், மகிழ்ச்சியும் எல்லையற்றது. நமது நம்பிக்கை ஆசிரியருக்கு மிக்க நன்றி.
தில்லைமணி, கோவை.

மே இதழில் ஆசிரியர் மரபின்மைந்தன் முத்தையா அவர்களின் “புதிய விடை” கவிதை ஆயிரம் கருத்தாழமிக்க கருத்துக்களைக் கொண்டது. பலரின் உள்ளங்களில் இக்கவிதை நம்பிக்கை பாய்ச்சும். “ஊற்றெடுக்கப்பட்டால் அற்றவர் துயரங்கள் அற்றிடச் செய்பவன் அந்தி வெயிலாய் ஒளிர்கின்றான்” – என்ற கவிதை வரிகள் புதிய விடைகளைத் தருகிறது. “புதிய விடை”களின் கவிதைக்கு ஆயிரம் ஆயிரம் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்
அ.ரூபி, ஆசிரியை, மதுரை.

ஆசிரியர் “நமது நம்பிக்கை” தங்களது புத்தகத்தை சித்திரை முதல் நாளில் வாங்கி படிக்கும் வாய்ப்பு கிட்டியது. சிறப்பான முகப்பு, வடிவமைப்பு, நல்ல கட்டுரைகள் பாராட்டும்படியான முயற்சி. சுயமுன்னேற்றத்திற்கான அற்புதமான மாத இதழ். நல்ல அறிவுப்பூர்வமான கட்டுரைகள் பாராட்டுக்கள்.
தமிழ்ச்செல்வி, சென்னை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *