கையில் கருவிகளுடன் காட்டுக்குள் தினமும் செல்லும் இளைஞனைக் கண்காணித்து வந்தார் அந்தப் பெரியவர். தீவிரவாதியா? தலைமறைவுக் குற்றவாளியா? ஒருநாள் பின் தொடர்ந்தார். பாறைகள் நிறைந்த பகுதியில் பூமியைத் தோண்டி தண்ணீர் தேடிக் கொண்டிருந்தான் அவன். விசாரித்தபோது விபரம் தெரிந்தது. வேலை தேடிவந்தவன் அவன். வேலை கிடைக்கவில்லை. உழைக்காமல் வீட்டிலிருக்க உள்ளம் ஒப்பவில்லை.
காட்டுப் பாறையைப் பிளந்து தண்ணீர் கொண்டு வரும்போதே தன் தசைகளை ஒய்வுக்குப் பழக்காமல் உழைப்புக்குப் பழக்கினான். அந்தப் பெரியவருக்கு சொந்தமான 500 ஏக்கருக்கு கண்காணிப்பாளர் ஆனான். பாறை தோண்டப் புறப்பட்டவனுக்கு புதையல் கிடைத்த மகிழ்ச்சி.
Leave a Reply