மரணப்படுக்கையில் இருந்த அந்த மனிதனுக்காக பிரார்த்திக்க வந்தார் பாதிரியார். பக்கத்தில் ஓர் இருக்கை இருந்தது. தனக்குப் பிரார்த்திக்கத் தெரியாதென்றும், சில ஆண்டுகளாய் இறைவனுக்காக இருக்கை போட்டு, அதில் கடவுள் இருப்பதாய்க் கருதி உரையாடி வருவதாகவும் சொன்னான். “இதுவே போதும்! இனி ஏன் பிரார்த்தனை!! விடைபெற்றார் பாதிரியார். இருக்கை விவகாரம் குடும்பத்துக்குத் தெரியாது. மறுநாள்
அந்த மனிதன் இறந்தான். படுக்கையைவிட்டு எழுந்து தலையை எதிரிலுள்ள இருக்கையில் தலைவைத்திருந்தான். கேள்விப்பட்ட பாதிரியார் சொன்னார், “கடவுளின் மடியில் கடைசி மூச்சை விட்டிருக்கிறான். இது எத்தனை பேருக்கு வாய்க்கும்?” இதயத்தில் அன்பிருந்தால் எதிர் இருக்கையிலும் இறைவன் இருப்பான்.
Leave a Reply