தன் தோற்றம் குறித்தும் திறமைகள் குறித்தும். தாழ்வு மனப்பான்மை கொண்டிருந்தாள் அந்தச் சிறுமி. “நீ அழகாய் இருக்கிறாய். உன்னை நேசிக்கிறேன்” என்று அவளிடம் தந்தை அடிக்கடி சொல்லி வளர்த்தார். அவளது மனம் மெல்ல மெல்ல மாறியது. ஊக்கம் உயர்ந்தது. உருவத்திலும் மாற்றங்கள் தென்பட்டன. அழகிலும் அறிவிலும்
தனித்தன்மை மலரும் விதமாய் வளர்ந்தாள். பதினெட்டாவது பிறந்த நாளில் பரிசு வழங்கிய தந்தை சொன்னார், “நீ மிகவும் அழகான குழந்தை. உன்னை நேசிக்கிறேன்”. அவள் தோழிகளிடையே அறிவித்தாள், “நான் அழகாய் இருப்பதால் என் குடும்பம் என்னை நேசிக்கவில்லை. என் குடும்பம் நேசிப்பதால் நான் அழகாய் இருக்கிறேன்”.
Leave a Reply