அந்தக் கடையில் வாடிக்கையாளர்கள் வரிசையில் வந்து கொண்டிருந்தார்கள். செல்வந்தர் ஒருவர் வரிசையை உடைத்துக் கொண்டு நுழைய முயன்றார். மற்றவர்கள் தடுத்ததும் ஆவேசமாய்ச் சொன்னார், “நான் யார் தெரியுமா?”. கடை ஊழியர் பணிவாய்ப்பேசி அவரை நகர்த்த முயன்றார். “நான் யார் தெரியுமா? உறுமினார். மேலாளர் வந்து வரிசையில் வரப்பணித்ததும் “நான் யார் தெரியுமா?” என்றார்.
மேலாளர் அலுவலக ஒலிபெருக்கியில் அறிவித்தார். “தான் யார் என்று தெரியாமல் ஒரு மனிதர் எதிரே வரும் எல்லோரிடமும் கேட்கிறார். அறிந்தவர் யாரேனும் அடையாளம் காண உதவுங்கள்!” தன்னை மறப்பதே தலைக் கனத்தின் இலக்கணம்.
Leave a Reply