அந்தக்காலம் இந்த மாதம்

aug 2 , 1930

‘வொன்டர் பிரட்’ என்ற உலகின் புகழ் பெற்ற ரொட்டித் துண்டுகளை கான்டினேன்டல் வங்கி நிறுவனம் இன்று அறிமுகம் செய்தது. உலகின் மிகப்பெரிய விற்பனைப் பொருளாக ‘வொன்டர்’ உருவெடுத்தது குறிப்பிடத்தக்கது.

aug 3 , 1977

முழுவதும் கட்டமைக்கப்பட்டதும்,  உபயோகிக்க வசதியானதுமான பதந-80 என்ற கணினி அறிமுகம் செய்யப்பட்டது. இதை கண்டறிந்தவர் ரேடியோ சேக். ப என்பது தயாரிப்பு நிறுவனமான ‘டான்டி’யைக் குறிக்கிறது. தந-ரேடியோ சேக்கை குறிக்கிறது. 80- இந்த கணினியின் மைக்ரோ ப்ராஸஸரை தயாரித்த சைலாக் நிறுவனத்தின் உற்பத்தி எண்.

aug 5 , 1891

அமெரிக்கன் எக்ஸ்பிரஸின் பயணியர் காசோலை முதன்முறையாக  ஏற்கப்பட்டு பணமாக மாற்றப்பட்ட நாள் இன்று.

aug 6, 1928

‘வார்னர்’ சகோதரர்கள் ஒலியுடன் கூடிய திரைப்படத்தை இன்று முதன்முதலில் திரையிட்டனர். இது தொடர்ச்சியான குறும் படங்களின் தொகுப்பாக அமைந்திருந்தது. பின், வார்னர் சகோதரர்களின் பங்கு மதிப்பு $8 லிருந்து $65 -ஆக உயர்ந்தது. ஒரே நாள் இரவில் சாதனையின் உச்சம் தொட்டவர்கள் இவர்கள்!!

aug 11, 1968
‘தி பியட்ல்ஸ்’ அதனுடைய புதிய நிறுவனத்திற்கு ‘ஆப்பிள் ரெக்காட்ஸ்’ என்று பெயரிட்ட நாள் இன்று. ஆப்பிள் ரெக்காட்ஸிற்கும் ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்திற்கும் ‘ஆப்பிள்’ என்ற பெயர் யாருக்கு சொந்தம் என்ற சட்டபூர்வமான வழக்கு 90களில் தொடரப்பட்டு அடுத்த நூற்றாண்டிலும் தொடர்ந்தது.

aug 12, 1851
சிங்கர் தையல் இயந்திரத்திற்கு அதிகார உரிமை அளிக்கப்பட்டது. ஐசக் சிங்கரும் அவர் பங்குதாரருமான எட்வர்ட்கிளர்க், எலியஸ் ஹோவே என்பவர்க்கு எதிரான சட்டவிரோதமான வழக்கில் தோல்வி அடைந்தனர். இருப்பினும் சிங்கரின் தையல் இயந்திரம் அவர் திறமையால் விற்பனையில் சாதனை படைத்தது!

aug 22, 1901

டெட்ராய்ட் நகரில் ஹென்றி லேலன்ட், என்பவரால் ‘தி கேடிலாக் நிறுவனம்’ நிறுவப்பட்டது. இந்த கேடிலாக் கார்கள், டெட்ராய்ட் நகரை கண்டறிந்த ‘அன்டாய்ன் டி லா மோத் கேடிலாக்’ என்பவர் பெயரில் உருவாக்கப்பட்டன.

aug31, 1995

‘வின்டோஸ் 95’ என்ற மென்பொருளை வெளியிட்ட சில நாட்களிலேயே, ஃபிளாப்பி டிஸ்க்கால் உருவாக்கப் பட்டவற்றை வைரஸ் அழிக்கும் என்ற அதிர்ச்சித் தகவலை கண்டறிந்தது மைக்ரோசாப்ட் நிறுவனம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *