நமக்குள்ளே

‘நமது நம்பிக்கை’ ஜுலை இதழில் ‘வாழ்வில் என்ன நேர்ந்தாலும் தன் அடிப்படைத் தன்மை இழக்காதவர்களே வெற்றியாளர்கள்’ என்னும் வரிகளில் வெற்றியின் ரகசியத்தை சொல்லிய பேராசிரியை பர்வீன் சுல்தானா அவர்களின் வெற்றித்திசை விழாப் பேருரை வெகுசிறப்பு.

த.சூரியதாஸ், சிலட்டூர்

‘நமது நம்பிக்கை’ இதழ் உற்சாகத்தின் ஊற்று நம்பிக்கை ஒளியின் கீற்று! இதழின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பு! கான்ஃபிடன்ஸ் கார்னர் – ரியலி சூப்பர்ப். சின்ன விஷயங்கள் சிறந்த வாழ்க்கை யாதார்த்தம்! இதழின் முதல் பக்கம் முதல் கடைசி வரை அனைத்தும் அற்புதம்.

ப.கோபிபச்சமுத்து, கிருஷ்ணகிரி.

கடந்த இதழில் க.அம்சப்பிரியா அவர்களின் ‘வாழ்க்கை ஒரு திருவிழா’ கட்டுரை வாழ்க்கையில் விரக்தியும் சலிப்பும் அடைபவர்களுக்கு ஒரு வரப் பிரசாதம்.

அ.சம்பத், திருவரங்கம்.

அலைகள் ஓயும் வரை காத்திராமல் கடமையை செய்தால் வெற்றி பெறலாம் என்ற கருத்தை, கர்மவீரர் காமராசர், அப்துல்கலாம் ஆகியோரை எடுத்துக்கூறி நல்லசாமி அருமையாக விளக்கியுள்ளார். மாற்றத்தை வாழ்வில் செய்ய விரும்புவோர்களுக்கு அறிதல், உணர்தல், புரிதல், தெளிதல் ஆகிய நான்கு சிந்தனைகள் தேவை என்பதை திருவள்ளுவர் சிறப்பாக விளக்கியுள்ளார். நாள்தோறும் ஆற்றவேண்டிய பணிகள் பற்றி கால அட்டவனை தயாரித்துச் செயல்படுவது தேவை எனக் கூறியது தேவையானது. வாடகைக்கு பாடநூல் ஏற்பாடு புதுமையான ஒன்றாகும்.

இரா.தியாகராசன், இலால்குடி.

நமது நம்பிக்கை இதழ் எனது முன்னேற்றத்திற்கு பக்க பலமாக இருக்கிறது. மரபின்மைந்தன் முத்தையாவின் கடைசிப் பக்கக் கவிதை மிகவும் அருமை. மீண்டும் படிக்க படிக்க உடலில் புத்துணர்ச்சியை ஊட்டுகிறது. எனது நன்றியையும் பாராட்டையும் நமது நம்பிக்கை இதழுக்கு தெரிவித்துக் கெள்கிறேன்.

ச.செல்வராஜ், சரவணம்பட்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *