கான்பிடன்ஸ் கார்னர் – 1

இமையின் விளிம்பிலிருந்து எட்டிப்பார்த்த கண்ணீர்த்துளி, இறங்கத் தயாரானது. இருத்தி வைத்த இமையோ துடித்தது, தடுத்தது. கண்ணீர்த்துளி சொன்னது, “பிறந்த இடத்திலேயே இருந்தால் எனக்குப் பெருமையில்லை. சிப்பிக்குள்ளிருந்து முத்து சரியான நேரத்தில் வெளியானால்தான் மதிப்பு. என்னைத் தடுக்காதே!” இமைக்குப் புரிந்தது.

அன்பால்-வலியால்-ஆனந்தத்தால் திரளும் கண்ணீர்த்துளியை அன்றுமுதல் இறக்க அனுமதித்தது. வெளிப்படுத்தப்படும் உணர்வின் வலிமையை உலகம் அன்றுமுதல் உணர்ந்தது. உணர்வை வெளிப் படுத்துங்கள். உள்ளத்தை பலப்படுத்துங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *