குளிர்கால இரவொன்றில் சாலையோரத்தில் அமர்ந்திருந்த முனிவரை அரசன் கண்டான். அவர் ஆடைகள் அணிந்திருக்கவில்லை. ஒரு சால்வையைத் தந்தான் அரசன். “கடவுள் தந்த தோலாடை இருக்க மேலாடை எதற்கு? என்னைவிட ஏழைகள் இருந்தால் அவர்களுக்கு கொடு”. முனிவர் பதில் கேட்டு ஏளனமாய்ச் சிரித்தான் அரசன்.
“உன்னைவிட யார் ஏழை?” முனிவர் சொன்னார், “இருக்கும் நாடு போதாதென்று இன்னொரு நாட்டை கைப்பற்றப் போகிறாயே! உனக்குத்தான் தீரவில்லை, தேவை. உண்மையில் நீ தான் ஏழை” அரசன் தலைகுனிந்தான். துறவிக்கு வேந்தன் துரும்பு.
Leave a Reply