கான்பிடன்ஸ் கார்னர் – 3

ஒரேயொரு நாள் எல்லோர் இதயங்களையும் எல்லோரும் பார்க்கலாம் என்று கடவுள் அறிவித்தார். மாசுமரு இல்லாமல் பொன்னாய் ஒளிவீசியது ஓர் இளைஞனின் இதயம். “அழகிய இதயன்” விருது அவனுக்கே கிடைக்கும் என்று அனைவரும் நினைத்தனர். கிழிந்தும், சிதைந்தும் கிடந்த ஒரு முதியவனுக்கே, “அழகிய இதயன்” விருதினை

அளித்தார் கடவுள். “மற்றவர்கள் இதயம் உடைந்த போதெல்லாம், தன் இதயத்தின் துளியை எடுத்து ஒட்டுப்போட்டு உதவியவர் இவர். மற்றவர்கள் வலியை மதிக்காமல் இதயம் காத்த இளைஞனை விடவும் இந்த முதியவர் இதயமே அழகு”. இது கடவுள் தீர்ப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *