மலைச்சரிவில் குழந்தைகளுடன் இறங்கிக் கொண்டிருந்தார் அந்த மனிதர். செங்குத்தாய் இறங்கியது பாதை. குழந்தைகள் மேலேயே திகைத்து நின்று கொண்டிருக்க, மிகக்கவனமாய் பாதைகளில் கால் வைத்துப்பாதி தூரம் வரை இறங்கிவிட்டார் அவர். பார்த்துக் கொண்டிருந்த ஒருவருக்கு பயங்கரமான கோபம். “குழந்தைகளை
விட்டுவிட்டுப் போகிறீர்களே”. அவர் சொன்னார் “இறக்கிவிடுவது எளிது, என்னைப் பார்த்து அவர்களே இறங்கக் கற்றுக் கொள்ள வேண்டும்”. திரும்பிப்பார்த்தார். குழந்தைகள் பரவசத்துடன் மெல்ல மெல்ல இறங்கிக் கொண்டிருந்தன.
Leave a Reply