ஏன் நூற்றுக்கு நூறு பக்கங்கள்?

புது வாசல்

தமிழகம் முழுவதும் ‘ஜாலியாக படிக்கலாம்…. ஈஸியாக ஜெயிக்கலாம்’ என்ற தலைப்பில் மாணவர்களுக்கான நினைவாற்றல் நிகழ்ச்சியையும் ‘சாதனையாளர்களை உருவாக்குவோம்’ என்ற தலைப்பில் பெற்றோர்களுக்கான கருத்தரங்கையும் நடத்திவரும் ஐடியா ப்ளஸ்ஸின் அடுத்த முயற்சிதான், சுதந்திரா ஹாலிடே ஸ்கூல்.

குழந்தைகள், வாழ்க்கையை எதிர்கொள்ள கற்றுத்தரும் சுதந்திரா ஹாலிடே ஸ்கூல், குழந்தைகள் சாதனையாளர்களாக உருவாவது பெற்றோர்கள் கையில்தான் இருக்கிறது என்பதை உறுதியாக நம்புகிறது.

எனவேதான், சுதந்திரா ஹாலிடே ஸ்கூல் நடத்துகிற சம்மர் கேம்ப் மற்றும் வாழ்வியல் பயிற்சி நிகழ்ச்சிகளில் எல்லாம் பெற்றோர்களும் வரவேற்கப்பட்டார்கள்.

தங்கள் குழந்தைகள் சாதிக்க வேண்டும் என்று விரும்பும் பெற்றோர்கள், அது அவர்கள் கற்கும் கல்வியில் அதிக மதிப்பெண்கள் பெறுவதாக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறார்கள். அந்த சாதனைக்காக தங்கள் வாழ்வை அர்ப்பணிக்கிறார்கள்.

மதிப்பெண்கள் மட்டுமே வெற்றிக்கு போதுமானதில்லை என்றபோதிலும் எத்தனை திறமைகள் இருந்தும் மதிப்பெண்கள் இல்லை என்றால் வளர்வதற்கு முன்னே அக்குழந்தை அனைவராலும் உதாசீனப்படுத்தப்படுகிறது.

கல்வி மகிழ்ச்சிக்கு பதிலாக பல மாணவர்களின் வாழ்வில் மன அழுத்தத்தையே ஏற்படுத்துகிறது. இந்நிலை மாறவே ‘ஜாலியாக படிக்கலாம்… ஈஸியாக ஜெயிக்கலாம்’ என்ற பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதுபோன்ற ஒருநாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தலாம். ஆனால் இந்த நம்பிக்கை செயல் வடிவம் பெற ஒருநாள் பயிற்சி போதாது. தொடர் பயிற்சி வகுப்புகள் தேவை.

மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் கற்பதையும் கற்பிப்பதையும் சுலபமாக்கும் இம்முயற்சியில் அவர்களை தொடர்ந்து உற்சாகப்படுத்த என்ன செய்யலாம், என்று யோசித்துக் கொண்டிருந்தபோது நமது நம்பிக்கை எங்களுக்கு இந்த நல்லதொரு வாய்ப்பை வழங்கி இருக்கிறது.

சாதனையாளர்களை உருவாக்குகிறவர்களை உருவாக்கி வரும் நமது நம்பிக்கை எங்களுக்கு களம் தந்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை. நல்ல முயற்சிகள் வெற்றி பெறவேண்டும் என்ற விருப்பம் கொண்ட நமது நம்பிக்கை ஆசிரியர் மரபின் மைந்தன் முத்தையா அவர்களுக்கும் நிர்வாக ஆசிரியர் வேணுகோபால் அவர்களுக்கும் எங்கள் நன்றிகள்.

இந்தக் கல்வியாண்டிற்குள் ஒரு லட்சம் குடும்பங்களுக்குள் குழந்தைகளிடம், ‘ஜாலியாக படிக்கலாம்’ என்ற எண்ணத்தையும், பெற்றோர்களிடம் ‘ஜாலியாக படிக்க வைக்கலாம்’ என்ற எண்ணத்தையும் ஏற்படுத்துவது என்ற லட்சியத்தோடு எங்கள் பயணத்தை துவங்குகிறோம்.

இணைந்த கரங்கள் எப்பொழுதும் வெற்றி பெறும் என்பதே எனது நம்பிக்கை. எனவே நமது நம்பிக்கை துணையோடு ஒரு லட்சம் மகிழ்ச்சியான குடும்பங்கள் என்ற லட்சியத்தை நிச்சயம் வெல்வோம்.

என்றென்றும் அன்புடன்
கிருஷ்ண. வரதராஜன்
சேர்மன் ஐடியா ப்ளஸ்
தாளாளர், சுதந்திரா ஹாலிடே ஸ்கூல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *