அக்டோபர் 1, 1958
அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் அதன் ‘கிரெடிட் கார்டை’ செய்தியாளர் சந்திப்பில் அறிமுகம் செய்தது. 2,50,000 மக்களும், 17500 நிறுவனங்களும் இதை வாங்க காத்துக்கொண்டு இருந்தனர்.
அக்டோபர் 4, 1996
ஒரே நேரத்தில் 5,13,659 மனிதர்கள் காபி பருகும் கோலாகல நிகழ்ச்சி பிரிட்டன் நாடு முழுவதும் நடைபெற்றது. 14,652 குழுக்கள் பங்கேற்றன. இதன் மூலம் கிடைத்த 28.46 மில்லியன் டாலர்கள் மேக்மில்லனின் புற்றுநோய் அறக்கட்டளைக்குச் சென்று சேர்ந்தது.
அக்டோபர் 6, 1945
மில்டன் ரெனால்ட்ஸ் மேற்பார்வையில் அமெரிக்காவில் பால் பாயிண்ட் பேனாக்கள் உற்பத்தி தொடங்கியது. நாளொன்றுக்கு 70 பேனாக்கள் உற்பத்தியாயின. தண்ணீருக்கடியிலும் சிகரங்களின் உச்சியிலும் தடையின்றி எழுதலாம் என்று உறுதி கொடுத்தார் ரெனால்ட்ஸ்.
அக்டோபர் 7, 1806
கார்பன் காகிதம் உருவாக்கப்பட்டு பிரிட்டன் நாட்டை சேர்ந்த த. வேட்குட் என்பவரால் உரிமம் பெறப்பட்டது. 150 ஆண்டுகளுக்கு பிறகு காப்பியர் எந்திரங்கள் கண்டுபிடிக்கப்படும் வரை கார்பன் காகிதங்களின் ராஜ்ஜியம்தான்!
அக்டோபர் 10, 1933
முதல் சிந்தடிக் டிடர்ஜென்ட் சந்தைக்கு வந்தது. ரசாயனங்களால் உருவாக்கப்பட்ட இதன் பெயரை Dreft (டிரப்ட்) என்று அறிவித்தனர் ப்ராக்டர் & கேம்பிள் நிறுவனத்தினர்.
அக்டோபர் 12, 1789
புரட்சியின் சூடு தணியும் முன்னே பிரஞ்ச் தேசம் கடன் உதவிகளுக்கு வட்டி வாங்கும் சட்டத்தை அறிமுகம் செய்தது. பொதுமக்கள் கடனுக்கு 5%-மும் வணிக கடன்களுக்கு 6%-மும் நிர்ணயிக்கப்பட்டன.
அக்டோபர் 15, 1878
அமெரிக்காவின் முதல் மின் நிறுவனம் ‘எடிசன் எலக்ரிக் லைட் கம்பெனி’ நியூயார்க்கில் நிறுவப்பட்டது. தாமஸ் ஆல்வா எடிசனுக்கு உதவ 100 டாலர்கள் மதிப்பில் 3000 பங்குகள் வெளியிடப்பட்டன.
அக்டோபர் 22, 1936
வரலாற்றின் புகழ்பெற்ற மோட்டார் காரான வோல்ட்ஸ் வேகன் பிட்டல் முதல் சோதனை ஓட்டத்தை மேற்கொண்டது.
Leave a Reply