இணையற்றவராய்த் திகழ 20 வழிகள் படிக்கும் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் வெற்றி பெற ஒரு வழி மட்டும் அல்ல. 20 வகையான வாசல்களைக் கொண்ட வழிகள் உள்ளதை “நமது நம்பிக்கை” மூலம் திறந்திருப்பதை உணர்த்துகிறது.
தங்க. பரமேஸ்வரன், திட்டக்குடி.
புகைவண்டியில் செல்லும்போது மலைகள் வேகமாக நகரும் அழகிய காட்சிகளை பார்த்து பூரித்துப் போயிருக்கிறேன் ஆனால் இன்று ஆசிரியர் மரபின்மைந்தன் முத்தையா அவர்களின் ஆற்றல் மிக்க எழுதுகோல் முனையால் மாமலைகளை நகர்த்தும் வேகமும் விவேகமும் என் வாழ்க்கைப் பாதையில் உள்ள தடைகளை தவிடுபொடியாக்குவதை பார்த்து பரவசமடைகிறேன். மலைகள் நகரட்டும்.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கோவை.
மனது வைத்தால் மலையை நகர்த்தலாம் பகுதியில் இம்மாதம் இடம்பெற்ற அற்புத விஞ்ஞானி எடிசன் பற்றிய செய்திகள் மிகச் சிறப்பாக இருந்தன. காண்பதற்குரிய அண்ணாரது இளமைக்கால புகைப்படம் – பொக்கிஷம். இணையற்றவராய்த் திகழ 20 வழிகள் படிக்கவும், பாதுகாத்து வைக்கவும் ஏற்றது. முன்னேற்றதிற்கான முட்டுக் கட்டைகள் எட்டு! ஒவ்வொன்றும் தேன் சொட்டு!
ப. கோபிபச்சமுத்து, புதுப்பேட்டை.
எவ்வளவு கஷ்டமான விஷயங்களையும் மிக எளிதாகச் சொல்வதற்கு ஒரு திறமை வேண்டும். சொல்லி முடிப்பதற்குள் இவ்வளவு காலம் ஏன் நமக்குத் தோன்றவில்லை என்பது மட்டுமே மலைப்பாகத் தெரிகிறது. ஆம்! உங்களது மலையை நகர்த்தலாம் தொடர் ஓர் அழகான, அற்புதமான, தெளிவான ஆரம்பம். மீண்டும் அடுத்த மலையை எப்படி, என்ன வழியில் நகர்த்த வழி கிடைக்கும் என ஆவலாய் உந்துசக்தியாய் ஏற்படுத்தி விட்டீர்கள்! அபாரம். நன்றி! உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
கே.சங்கர், கோவை.
Leave a Reply