கள்ளிச் செடிகள் சலித்துக் கொண்டன. “மனிதர்கள் மடையர்கள்! எங்களை வீட்டுக்கு வெளியே நிறுத்தி விடுகிறார்கள். எங்கள் முள்முனைகளைப் பார்த்து எள்முனை அளவுகூட பயப்படுவதில்லை. எங்களைக் கொண்டாடுவதில்லை.” முத்துக்கள் சிலிர்த்துக்கொண்டன. “மனிதர்கள் மகத்தானவர்கள். நாங்கள் ஆழ்கடலில் இருந்தாலும் ஆர்வமுடன் தேடியெடுக்கிறார்கள்.
ஆசை ஆசையாய் மெருகேற்றி அணிந்து கொள்கிறார்கள். ஒளிந்திருக்கும் திறமைக்கு ஒளி கொடுக்கிறார்கள்”. மற்றவர்கள் நம்மை மதிக்கிறார்களா இல்லையா என்பது, நாம் கள்ளிச் செடிகளா முத்துக்களா என்பதைப் பொறுத்தது.
Leave a Reply