சிறையிலிருந்து தப்பித்த அந்தக் கைதி, ஒரு நதியைக் கடந்தாக வேண்டும். இருட்டில் ஓடிவந்தவன் தட்டுத்தடுமாறி படகொன்றில் ஏறி வேகவேகமாய் துடுப்புப் போடத் தொடங்கினான். திசை தெரியாததாலோ என்னவோ மறுகரை வரவேயில்லை. துடுப்பு பிடித்தபடி தூங்கிப் போனான். காலையில் அவனை எளிதாகக் கைது செய்தனர். காரணம், கரையோரம் கட்டப்பட்டிருந்த படகின்
கயிற்றை அவிழ்க்காமலேயே துடுப்பு போட்டுக் கொண்டிருந்தான். பழைய பழக்கங்களில் இருந்து விடுவித்துக் கொள்ளாத போது…. விடுதலை ஏது?
Leave a Reply