தன்னை விமர்சித்து வந்த மொட்டைக் கடுதாசியால் மனமொடிந்து போயிருந்த அந்த மனிதரை உலுக்கியது, “அவருடைய ஐந்து வயது மகனின் அழுகுரல். தன் பாடப் புத்தகத்தில் இருக்கும் புலியின் படத்தைப் பார்த்து பயந்து அதைப் பிரிக்க மாட்டேன் என்று அழுது கொண்டிருந்தான் அந்தச்
சிறுவன். “அது காகிதப்புலி! கவலைப்படாதே! உன்னை ஒன்றும் செய்யாது” என்று ஆறுதல் கூறிய போதே அவருக்கொன்று தோன்றியது. தன்னைப் பற்றிய அனாமதேயக் கடிதம் கூட காகிதப்புலிதான். அதற்காகவா மனமொடிவது? உடனே கிழித்தெறிந்தார்…. காகிதத்தையும், கவலையையும்!!
Leave a Reply