வாங்கிய புத்தகங்களை பலர் முழுமையாக படிக்காமலே அலமாரியில் அடுக்கி விடுவது எதனால்? அடுத்து வாங்கும் புத்தகத்திற்கும் அதே கதி நேராமல் தவிர்ப்பது எப்படி?
(20ம் தேதிக்குள் உங்களின் சிறந்த பதில்களை அனுப்புங்கள். வெளியாகும் பதில்களுக்கு புத்தகங்கள், சிடிக்கள் பரிசு)
ஒரு மோசமான சினிமாகூட லட்சக்கணக்கானவர்களை உடனே சென்றடைகிறது. ஆனால் ஒரு நல்ல புத்தகம் சில ஆயிரம் பேரை சென்றடைய அதிக காலம் ஆகிறதே ஏன்?
மொழி கண்டு பிடிக்கும் முன் மக்கள் இசையை, ஒலியை சித்திரங்களையே தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படுத்தி வந்தனர். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இவ்வாறு பழக்கப்பட்ட மனம் சித்திரம், இசை உள்ளடக்கிய சினிமாவை ஏற்று அர்த்தம் புரிந்து மகிழ்ச்சி கொள்கிறது. புத்தகம் படிக்க குறைந்தபட்ச அறிவு தேவை. அதுமட்டுமல்ல தியானம் செய்வது போன்ற ஒரு கவனம் தேவை. சினிமாவிற்கு இந்தத் தடையில்லை.
பி.சௌந்தர்யா தேவி, கணபதி.
மோசமான சினிமாவுக்கு விமர்சனங்கள் அதிகமாவதோடு, அவை மீடியாக்கள் மூலம் பல எதிர்பார்ப்புக்கு உள்ளாகின்றன. ஆனால நல்ல புத்தகங்கள் வாசிக்கும் திறன் நம் மக்களிடையே மிகவும் குறைந்துள்ளது. நல்லதைவிட கெட்டது விரைவில் மனதில் ஏற்கும் திறன் தற்போதைய சூழல்.
து.பிரசாந்த், வெள்ளித்திருப்பூர்.
நல்ல நம்பிக்கையூட்டும் புத்தகங்களை படிக்க இளைய தலைமுறையிடையே ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும். புத்தகங்கள் விளம்பரப்படுத்தப் படவேண்டும். பின் இலவசமாகவும் மலிவு விலையில் கொடுத்து புத்தக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். ஒவ்வோர் வீட்டிலும் சிறு நூலகம் அமைக்க பெரியோர்களால் இளைஞர்கள் தூண்டப்பட வேண்டும்.
வி.நடராஜன், கள்ளக்குறிச்சி.
‘வால்’ போஸ்டர்
என்ன சொல்கிறாய்
என்பதை விட
என்ன செய்கிறாய்
என்பதே
நீ !
அறுந்த வால்களால் அமர்க்களப்படுவது (வால்) எனும் சுவர்கள்தான். அதனால்தான் இந்தப் பகுதிக்கு வால் போஸ்டர் என்று பெயர் வைத்தோம். சுதந்திரா ஹாலிடே ஸ்கூல் மாணவர்கள் நம் போஸ்டர்களால் தன் வீட்டை அலங்கரித்து வருகிறார்கள்.
இதை ஒழுங்காக கடைப்பிடிக்கும் மாணவ நண்பர்கள் வீடுகளுக்கு சுதந்திரா ஹாலிடே ஸ்கூல் டீம் பரிசுகளோடு சர்பிரைஸ் விசிட் வர உள்ளது. (தங்கள் குழந்தைகள் இதை கடைப்பிடிப்பதை பெற்றோர்கள் 94875 32893 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.)
நீங்களும் உதவலாமே: புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியின் தாளாளர் திரு. தங்கம் மூர்த்தி இந்த முயற்சியை தங்கள் மாணவர்களும் பின்பற்ற வேண்டும் என்ற நோக்கில் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் போஸ்டராக அச்சிட்டு வழங்கி உள்ளார். நூற்றுக்கு நூறு இயக்கம் அவர்களை மகிழ்வுடன் பாராட்டுகிறது. நீங்களும் உங்கள் பள்ளி மாணவர்களுக்கு இது போல உதவலாமே.
Leave a Reply