கொடியில் அசைந்த மலருக்கு கர்வம் தாங்கவில்லை. தன்னை முத்தமிட வந்த காற்றைக் கண்டு முகந்திருப்பிக் கொண்டது. அதிர்ந்து வீசிய காற்று மலரைக் கொடியிலிருந்து உதிர்த்தது. கீழே விழுந்த மலர் கதறியது. காற்று மலரைத் தரையில் இழுத்தது. மலர்
அழுதது. திடீரென்று முரட்டுக் கரமொன்று தன்னைப் பற்றித் தூக்குவதை உணர்ந்தது. ஆஜானுபாகுவான மனிதர் தன்னைத் தூக்கிச் செல்வதை உணர்ந்து கண்களை இறுக மூடிக் கொண்டது. மீண்டும் கீழே விழுந்தது தெரிந்து விழித்துப் பார்த்தால் ஆலயமொன்றில் ஆண்டவனின் அழகிய மலர்ப்பாதங்களில் அர்ச்சனைப் பூவாய் விழுந்தது தெரிந்தது. தனது கர்வம், வெறுப்பு, அச்சம் அனைத்தும் கரைந்து தன் பிறவியின் பயனை உணர்ந்தது மலர். எல்லாத் திறமைகளும் ஆண்டவனுக்கு அர்ப்பணமாகும்போதுதான் அர்த்தம் பெறுகின்றன.
Leave a Reply