நாகரீகம் – புதிய பகுதி

– ஸ்ரீநகுலா

எப்படி அனுப்ப வேண்டும் SMS?

சிரிக்க மறந்து போன இந்த அவசர உலகத்தில் இன்னும் நமக்குள் புன்னகையையும் சிரிப்பையும் பாதுகாத்து வைத்திருப்பது குறுஞ்செய்திகள். குறுஞ்செய்திகள் என்பதை விட குறும்பு செய்திகள் என்ற பெயரே அர்த்தப்பூர்வமாக இருக்கும்.

எஸ்.எம்.எஸ்களை படிக்கும்போதெல்லாம் எனக்குள் தோன்றும் கேள்வி இரண்டு. 1. உட்கார்ந்து யோசிப்பாங்களோ? 2. இதையெல்லாம் உருவாக்குவது யார்?

எனக்கு அனுப்பிய எவரும் இதை உருவாக்கியிருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் சில நேரங்களில் செய்திகளுக்கு கீழே க்ஷஹ் என்று யாரோ ஒருவர் பெயர் இருக்கும். ஆனால், நமக்கு அனுப்பியவர் வேறு ஒருவராக இருப்பார். தனக்கு வந்த செய்தியை பெயர் கூட மாற்றாமல் அப்படியே அனுப்பிவிடுகிறார்கள்.

ஏன் இதற்கெல்லாம் வருத்தப்பட வேண்டியிருக்கிறது என்றால், நட்பே உலகம் நாம்தான் உயிர் என்பதுபோலெல்லாம் பில்டப் செய்தியை படித்துவிட்டு கடைசியில் அது வெறும் Forward மெசேஜ் என்பது தெரியும்போது மகிழ்ச்சி ஏற்படுவதில்லை.

எனவே, நீங்களாக ஏதாவது யோசித்து அதை எஸ்எம்எஸ்ஸாக அனுப்பிப் பாருங்கள். அதில் அழகு இல்லாவிட்டாலும் அதிலிருக்கும் உண்மை படிப்பவரை கவரும்.

யாரோ ஒருவர் யோசித்ததுதானே அது. ஒருவரால் ஒன்று முடியும் என்றால், அதன் அர்த்தம் ஒவ்வொருவராலும் முடியும். (ஐ இது கூட ஒரு எஸ்.எம்.எஸ். டயலாக்தான்). எனவே, உங்களுக்கு வந்ததை அனுப்புவதற்கு பதில் உங்கள் உணர்வை உண்மையாக அனுப்புங்கள்.

பகிர்ந்துகொண்டே ஆக வேண்டும் என்றஒரு வெற்றிச் சிந்தனையை தாராளமாக நீங்கள் ஊர்ழ்ஜ்ஹழ்க் செய்யலாம். முடிந்தால் எனக்கு இதை அனுப்பியவர் என்று அவர் பெயரோடே அனுப்பலாம். இதனால் நட்பு வட்டமும் விரியும். நான் உன்னை எப்படி நேசிக்கிறேன் தெரியுமா? நீ எனக்கு எப்படிப்பட்ட நண்பன் தெரியுமா? போன்றசெய்திகளைத்தான் ஊர்ழ்ஜ்ஹழ்க் செய்யக்கூடாது.

யாராவது உங்களிடம் ஆர்வமாக பேசிக்கொண்டிருக்கும்போது, எஸ்.எம்.எஸ். படிக்கவோ அனுப்பவோ செய்யாதீர்கள். பேசும் விஷயத்தில் நீங்கள் ஆர்வம் காட்டததாகவோ அல்லது தன்னை அலட்சியப்படுத்துவதாகவோ உங்கள் முன் உட்கார்ந்திருப்பவர் நினைக்க நேரிடும்.

எழுத்தாளர்கள் கருவைப்பொறுத்து அதை சிறுகதையாகவோ நாவலாகவோ எழுதுவதுபோல செய்தியைப்பொறுத்து போனில் பேசலாமா? எஸ்.எம்.எஸ். அனுப்பலாமா? என முடிவு செய்யுங்கள். எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டிய செய்தியை போனில் பேசி நேரத்தை வீணடிக்காதீர்கள்.

இரவில் இரண்டு மணிக்கு செய்தி அனுப்பி தூக்கம் வராதோர் சங்கம் என்று பெருமையடிக்காதீர்கள். அதெல்லாம் இப்போது போரடித்துவிட்டது.

யாருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினாலும் பெயரில்லாமல் அனுப்பாதீர்கள். அடிக்கடி செல்லை மாற்றிக்கொண்டிருப்பவர்கள், செல்தொலைந்ததால் நம்பரை இழந்துவிட்டவர்களுக்கு நீங்கள் பெயரோடு அனுப்பினால் உங்களை அடையாளம் காண உதவியாக இருக்கும்.

எஸ்.எம்.எஸ் வந்தால் படித்துவிட்டீர்கள் என்பதன் அடையாளமாக நன்றி செய்தியை அனுப்புங்கள்.

இதையெல்லாம் நீங்கள் கடைபிடித்தால் குறுஞ்செய்தி குறும்பு செய்தியாக மட்டுமல்ல படிக்கிறவர்களுக்கு கரும்பு செய்தியாகவும் இனிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *