சுந்திரா ஹாலிடே ஸ்கூல் நூற்றுக்கு நூறு இயக்கம் நமது நம்பிக்கை இணைந்து வழங்கும் புதுவாசல்

மாணவர் பகுதி

உங்களால் முடியும் உலகை வெல்ல…

கியூபாவில் அனைவருக்கும் கல்வி என்பதை எளிதாக சாத்தியமாக்கினார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஒரு மாதம் பள்ளி கல்லுôரி என்ற வித்தியாசம் இல்லாமல் அனைத்து கல்வி

நிலையங்களுக்கும் விடுமுறை விட்டு மாணவர்கள் ஆசிரியர்கள் என அனைவரும் படிக்காதவர்கள் இருக்கும் இடங்களுக்குச் சென்று கற்பித்தல் பணியில் ஈடுபட்டனர். இப்படி ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு வகுப்பாக படித்த அந்த நாடு பத்தே ஆண்டில் பத்தாம் வகுப்பை எட்டிப்பிடித்தது. பேட்டில் பார் சிக்ஸ்த் கிரேடு. பேட்டில் பார் செவன்த் கிரேடு என்று நாடே திரண்டது தன் நாட்டை மேம்படுத்துவதற்காக.

எல்லாமே சாத்தியம்தான் சாத்தியமாக்கக் கூடியவர்கள் ஒன்றிணைந்தால். இதற்கான முயற்சிதான் சுயமுன்னேற்ற பணியாளர்களை உருவாக்குவதும் ஒன்றிணைப்பதும்.

வெற்றி பெறவேண்டும் என்ற விருப்பம் எல்லோருக்கும் இருக்கிறது. ஆனால் பலருக்கு அது செயலாக மாறாமல் விருப்பம் என்ற நிலையிலேயே நின்றுவிடுவதால்தான் இங்கே வெற்றியாளர்கள் குறைவாக இருக்கின்றார்கள். இந்த விருப்பக்கனலை ஊதி பெரிதாக்கி வெற்றி விருப்பத்தை செயல் துடிப்பாக கொழுந்து விட்டு எரியச்செய்வதுதான் சுயமுன்னேற்ற பயிற்சியாளர்களின் பணி.

‘போதிதர்மா’ இது முதன் முதலில் பயிற்சித் துறையில் காலடி எடுத்து வைத்தபோது எங்கள் நிறுவனத்திற்கு நாங்கள் வைத்திருந்த பெயர்.

போதி என்றால் கற்றுத்தருதல். தர்மா என்றால் கடமை என்ற பொருளில் இப்பெயர் வைக்கப்பட்டது. அதாவது தனக்கு தெரிந்த ஒன்றை அதைப் பற்றி தெரியாதவர்களுக்கு கற்றுத்தருவது ஒவ்வொரு மனிதனின் கடமை.

உங்களுக்கு எழுதப்படிக்கத்தெரியும் என்றால் அது தெரியாத ஒருவருக்காவது அதைக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற கடமை உங்களுக்கு இருக்கிறது.

இதையெல்லாம் சொல்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது. கடந்த இதழில் புதுவாசல் பகுதியில் சுயமுன்னேற்ற பயிற்சியாளர்களுக்கு சுதந்திரா ஹாலிடே ஸ்கூல் வழங்க உள்ள பயிற்சி பற்றி குறிப்பிட்டிருந்தோம். அதிகம் பேர் ஆர்வத்தோடு விண்ணப்பித்துள்ளனர்.

கல்வித்தகுதி பற்றி எதுவும் குறிப்பிடவில்லையே என்று சிலர் கேட்டிருந்தார்கள். மற்றவர்களுக்கு பயன்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவராக இருந்தால் நீங்கள் இரண்டாவது மட்டுமே படித்திருக்கிறீர்கள் என்றால்கூட அது கல்வித்தகுதிதான். இன்னும் சொல்லப்போனால் இந்த எண்ணம்தான் கல்வி கற்றதற்கான தகுதியே.

எனவே நான் மேம்பட வேண்டும் மற்றவர்களையும் மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால் அந்தத் தகுதியே போதும்.

சுய முன்னேற்றப் பயிற்சியாளராவதற்கான உங்கள் விருப்பத்தை நமது நம்பிக்கைக்கு கடிதம் மூலம் தெரிவியுங்கள்.

விரைவில் சந்திப்போம்.

என்றென்றும் நம்பிக்கையுடன்…

கிருஷ்ண.வரதராஜன்

நூற்றுக்கு நுôறு இயக்கம்

சுதந்திரா ஹாலிடே ஸ்கூல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *