“நமது நம்பிக்கை” படித்தேன். அடுத்தடுத்த பக்கங்கள் நம்பிக்கையின் சாரமாய் இருக்கின்றன. மூச்சு திணறிப் போயிருக்கும் தோல்வியின் கூட்டம்! அதிலும் குறிப்பாய் “கான்ஃபிடன்ஸ் கார்னர்” நம்பிக்கையின்
தடத்தை இதயத்தில் பதிக்கிறது! இதழை வாசித்தால், நிச்சயம் இது வெற்றிகளின் தலைவாசல் என்பதில் சிறிதும் ஐயமில்லை. தொடரட்டும் பயணம்: மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ஜி.ரெஜினாபானு, பழனி
“நூற்றுக்கு நூறு” பகுதி இன்றைய மாணவ சமுதாயத்துக்கு பயனுள்ள வழிகாட்டி. இதனைப் படித்துப் பின்பற்றினால் நூறு சதவீதம் வெற்றி நிச்சயம் கிட்டும் என்பது நிதர்சனம்.
ப.கோபிபச்சமுத்து, கிருஷ்ணகிரி
தொட்டதெற்கெல்லாம் குறுஞ்செய்தி அனுப்பாமல் குறுஞ்செய்தி குறும்புச் செய்தியாக மட்டுமின்றி படிக்கிறவர்களுக்கு கரும்புச் செய்தியாக கூறிய ஸ்ரீநகுலா பாராட்டுதலுக்குரியவர்.
அ.சம்பத், கோயம்புத்தூர்
மரபின்மைந்தனின் “உன் வாழ்க்கை மாறும்” என்னும் தலைப்பில் உள்ள 16 வழிகளும் பதினாறு வைரங்கள். அதிலும் குறிப்பாக இன்றைய பிரச்சனைமிக்க வாழ்க்கை பந்தயத்தில் நித்தமும் நினைத்துக் கொள்ள வேண்டிய முத்தான வரிகள் “உதவாது சோர்வு. அது இல்லை தீர்வு ”
ம.பெர்னாட்சா, கோவை
பிரச்சனை என்கிற தயிர்ப் பாத்திரத்தைப் பார்த்து மிரள்வதால் பயனில்லை. தீர்வு என்கிற வெண்ணெய் திரண்டு வரும். தன்னைப் பக்குவப்படுத்தி, பட்டைத் தீட்டிய வைரங்களாய் மின்னச் செய்யும் பொன்னான முயற்சி! பிரசுரமாகும் ஒவ்வொரு கான்ஃபிடன்ஸ் கார்னர்க்கும் பாராட்டுக்கள்.
ஜி.அப்துல்பாரி, பழனி
Leave a Reply