எதிரிகளால் துரத்தப்பட்ட இளைஞன் ஒரு குகைக்குள் ஒளிந்தான். தன்னை எப்படியாவது காப்பாற்றுமாறு கடவுளை இறைஞ்சினான். ஒளிந்த குகையின் வாயிலில் சிலந்தி ஒன்று தோன்றி வலை பின்னத்
தொடங்கியது. அடுத்தநாள் காலைக்குள் பெரிய சிலந்தி வலை குகைவாயிலில் உருவாகி இருந்தது. அந்த குகையை எதிரிகள் சூழ்ந்தனர். வாசலில் வலையைப் பார்த்து உள்ளே யாரும் இல்லையென நினைத்து வந்த வழியே சென்றனர். நம்பிக்கையுடன் இருந்தால் நாம் நினைக்காத திசையிலிருந்தும் தீர்வுகள் தேடிவரும்.
Leave a Reply