” உடலெல்லாம் வலி. எங்கு தொட்டாலும் துடிக்கிறேன்”. நோயாளி சொன்னதில் மருத்துவருக்கு ஆச்சரியம். சோதித்தால் நோயின் சுவடே இல்லை. சற்றே உற்றுப் பார்த்ததில் வந்தவரின் சுட்டுவிரலில் காயம் இருந்தது. தொட்ட இடமெல்லாம் வலி
சுட்டுவிரலில் ஏற்பட்டதை, உடலெல்லாம் காயமென நினைத்துக் கொண்டிருந்தார். நம் மனமும் சுட்டுவிரல் போலத்தான். அதில் வெறுப்பு விரக்தி அவநம்பிக்கை இருந்தால், எல்லா இடங்களிலும் அதுவே இருப்பதாய்த் தோன்றும். மனதை சீர் செய்தால் மற்றவையும் சீராகும்.
Leave a Reply