நமக்குள்ளே

“கல்வி நிறுவனங்கள் சந்தேகங்களுக்கும், விமர்சனங்களுக்கும் அப்பாற்பட்ட உயரத்தில்  உருவாவதே உலகத்தரம் வாய்ந்த கல்விக்கு உத்திரவாதம் தரும் சூழலை உண்டாக்கும்” என்னும் வரிகளில் உலகத்தரம் வாய்ந்த கல்வி கிடைக்க உன்னத அறிவுரை

வழங்கிய “பலகையிழந்த பல்கலைக்கழகங்கள்” நமது பார்வை தலையங்கம் வெகு சிறப்பு.

த.சூரியதாஸ், சிலட்டூர்.

அன்புக்கும் காதலுக்கும் பேர் போன பிப்ரவரி மாதத்தில் உண்மையான காதலை வெளிச்சம் போட்டுக் காட்டிய கவிதை அருமையிலும் அருமை.                                                        டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கோவை.

“உங்களை ஆள்வதுதான் முக்கியம். உலகை ஆள்வது அப்புறம்” என்ற வரிகள் ஆழ்ந்த அர்த்தம் பொதிந்தவை.

அ.சம்பத், கோவை.

“எது காதல்”? என கடைசிப்பக்கத்தில் “மரபின்மைந்தன் முத்தையா” அவர்கள் படைத்திருக்கும் கவிச்சரம் முத்தாய்ப்பாய் அமைந்திருந்தது! “வயதின் கிளிர்ச்சியல்ல காதல் எந்த ஒரு நிலைப்பாட்டிலும் அன்பின் வெளிப்பாடுதான் காதல்’ என முத்திரை பதித்தது மனதில். பாராட்டுக்கள்.

ஜி.ரெஜினாபானு, பழனி.

மாணவர்களுக்காக இவ்வளவு சிறப்புத் தகவல்களையும், நம்பிக்கையூட்டும் செய்திகளையும் அள்ளித் தரும் அமுதசுரபி நமது நம்பிக்கைக்கு நெஞ்சார்ந்த நன்றி.

தங்க.பரமேஸ்வரன், சின்னகொசப்பள்ளம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *