சிகாகோ நாட்டில் உள்ள பேருந்து நிலையத்தில் ஒரே வழித்தடத்தில் ஏராளமான பேருந்துகள் போகும். ஆனால் ஒரேயொரு பேருந்தில் கூட்டம் அலைமோதும். முந்தைய பேருந்துகளைத் தவிர்த்துவிட்டு அந்தப் பேருந்துக்காக மக்கள் காத்திருப்பார்கள். அதிகாரிகள் ஆராய்ந்த போது அந்த ஓட்டுனர்
பாடிக்கொண்டே வாகனம் ஓட்டுவார் என்று தெரிந்தது. அவர் வாழ்வில் நல்ல பாடகராய் உருவாக நினைத்தார். சூழல் ஒத்துழைக்க வில்லை. கிடைத்த வேலையில் இருந்து கொண்டே தன் கனவை நனவாக்கினார். இப்போது அவரும் பிரபலமான பாடகர்தான். கனவு நனவாக எத்தனையோ கதவுகள் இருக்கின்றன.
Leave a Reply