SMS

பருந்துகள் போல பறக்க ஆசைப்பட்டு…

வாத்துகளை போல் நீந்தக் கூடாது.

இலக்குகள் நிர்ணயிக்கப்பட்ட பின்

அதை நோக்கியே நகர வேண்டும்.

நதிகள் அதன் நீரை குடிப்பதில்லை.

மரங்கள் அதன் கனிகளை சுவைப்பதில்லை

கதிரவன் அதன் கதிர்களால் வெப்பம் கொள்வதில்லை

மற்றவர்களுக்காக வாழ்வதே இயற்கையின் நீதி!!!

இன்று நாடாளும் அரசனும்

அன்று ஒரு நாள் அழுத குழந்தைதான்,

இன்றைய வானுயர கட்டிடங்கள் அனைத்தும்

அன்று ஒரு நாள் வரைபடங்கள்தான்.

இன்று நீ எங்கிருக்கிறாய் என்பதைக் காட்டிலும்

நாளை நீ எங்கிருக்கப் போகிறாய் என்பதுதான் முக்கியம்!!!

மழைக்கு பயந்து மற்ற பறவைகள்

கூடுகளை நோக்கி பறக்கும்.

கழுகு மட்டும் மேகத்தைத் தாண்டிப் பறக்கும்.

பிரச்சனைகள் அனைவருக்கும் பொதுவானது.

அதை சரியாக கையாள்வது அவர் அவர் திறமை.

முதியவரின் டி-சர்ட்டில்  எழுதப்பட்ட வாசகம்:

என் வயது அறுபது அல்ல. பதினாறு.

மிச்சம் 44 ஆண்டுகள் அனுபவம்…

நேர்மறையான எண்ணங்களே உங்களை

வெற்றியாளராக அடையாளப்படுத்தும்.

வெற்றிக்கு தேவையான ஒப்பனை:

உதட்டிற்கு – உண்மை,  கண்களில் – பரிவு

கைகளுக்கு – கொடை, முகத்தில் – புன்னகை

மனதில் – நம்பிக்கை

நான் படிப்பில் முதல்

மதிப்பெண் பெற்றவன் அல்ல… ஆனால் இன்று,

படிப்பில் முதல் இடம் வகித்த மாணவர்கள்

அனைவரும் என் நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *