விடுமுறை என்பது எதற்காக?
சென்ற மாத இதழில் கேட்கப்பட்ட கேள்வி
சாதிக்கத் தேவையான ஆற்றல் அனைவரிடமும் இருக்கிறது.
ஆனால், ஏன் அனைவரும் சாதிப்பதில்லை.
ஆற்றல் என்பது மனதுக்குள் புதைந்துள்ள புதையல். சாதிக்க வைக்கும் புதையல். அதை பலர் கண்டு கொள்வதில்லை, உணர்ந்து கொள்வதில்லை. ஆய்வதில்லை அதனால் அவர்கள் சாதிப்பதில்லை. உள்முகப் பயணம் மேற்கொண்டால் சாதனையும் இயல்பாக அமையும்.
நீ.கோ.நாகலட்சுமி, நாகர்கோவில்.
தனது நம்பிக்கையிலும், முயற்சியிலும் தீர்க்கமாய் இருப்பவர் சிலரே ஆவர். பலர், தங்களது நம்பிக்கையிலும் முயற்சியிலும் தீர்க்கமாய் இல்லாமல் முடியுமோ, முடியாதோ என சந்தேகம் கொள்வதாலேயே, அனைவரும் சாதிப்பதில்லை.
க.எழிலரசி, திருச்சி.
பலருக்கு தங்களிடமுள்ள ஆற்றலை தாங்களே உணர்ந்து கொள்ளும் சந்தர்ப்பம் அமைவதில்லை. சிலரோ அதை உணர்ந்தாலும் செயல்படுத்த முனையாமல் சோம்பேறித்தனத்தால் அசட்டை செய்கிறார்கள். வெகு வெகு சிலரே சந்தர்ப்பத்தை நழுவவிடாமல் தங்கள் ஆற்றலாலேயே தங்களை மேம்படுத்திக் கொள்கிறார்கள்.
மும்தாஜ்பேகம், திருப்பூர்
Leave a Reply