நமக்குள்ளே

“கனவுகள் உனது பிறப்புரிமை” என்ற கவிதை மிகவும் அருமை. இன்றைய மாணவ மாணவிகள் ஏராளமான அழுத்தங்களால் பலவிதமான சவால்களை எதிர்கொள்ளும் இக்காலங்களில் இக்கவிதையின் சுவையான வரிகள் மாணவச் சமுதாயத்தின்

உள்ளத்தில் அனலாக எப்பொழுதும் இருந்து கொண்டு இருக்கும். ‘நல்ல எண்ணங்களால் உள் மனதை நிரப்பி தாமதம் செய்யாது துணிந்து நீ உயர்ந்துவிடு’ என்பது நம்பிக்கையோடு வெற்றி நடைபோட இக்கவிதை வரிகள், வழிகாட்டும் வளமான வார்த்தைகளாக, கலங்கரை விளக்காக மாணவச் சமுதாயத்துக்கு அமைகிறது. பாராட்டுக்கள்.

அ.ரூபி, ஆசிரியை, மதுரை

‘பணத்தை அலட்சியமாக செலவு செய்வதல்ல பணக்காரத்தனம். அதை பக்குவமாய் செலவு செய்வதுதான் மிகச்சிறந்த பணக்காரத் தனம்’ என்பது. ஒவ்வொருவரும் ஆழ்ந்து சிந்தித்து செயல்படுத்த வேண்டிய அற்புதமான அறிவுரை. பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய வைர வரிகள்!

இமயவரம்பன், கோவை.

நம் கனவுகளை நனவாக்க ஒவ்வொரு விடியலிலும் நம் திறமைகளால் அவற்றை முன்நிற்பது நமது கடமை என்பதை மரபின்மைந்தன் முத்தையா அவர்களின் “கனவுகள் உனது பிறப்புரிமை” கவிதை அழகாய் மொழிந்தது.

செ.நாகராஜன், அய்யம்பாளையம்.

நல்ல கருத்துக்களை விதைக்கும் நாற்றுக்களாக நமது நம்பிக்கை இருக்கிறது என்பதற்கு மனது வைத்தால் மலையை நகர்த்தலாம் தொடரே உதாரணம். வாழ்க்கை என்பது “எப்போதும் கடினமானதாகவும் இருந்ததில்லை, எப்போதும் சுலபமானதாகவும் இருந்ததில்லை” என்பன போன்ற வரிகள் இதயத்தில் செதுக்கி வைத்தால் “இமயமாய்” உயரலாம். பாராட்டுக்கள்!

தங்க.தாஸ், கீரனூர்.

சாதனை படைத்த சாமானியரான லாரன்ஸ் அவர்களின் இன்னொரு பக்கமான உடல்நிலை, குடும்ப சூழல் யப்பப்பா…… ஜெயிக்க வேண்டிய ஒவ்வொருவருக்கும் இது ஒரு புனித நூல் மாதிரி அவரது வாழ்க்கை ஒரு பாடம்.

அமராவதி. திட்டக்குடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *