பென் கோஃபன் என்பவர் புகழ்பெற்ற பழங்கால கோல்ஃப் விளையாட்டு வீரர். பார்வையிழந்த ஒருவர் அவரிடம் போட்டிக்கு வந்தார். தன்னுடன் கோல்ஃப் விளையாட வேண்டும் என்று பந்தயம் போட்டார். பென் கோஃபனுக்கோ தர்ம சங்கடம். ஆனாலும்
பந்தயத்தை மறுக்க முடியவில்லை. “வேறேதும் நிபந்தனைகள்உண்டா?” என்று கேட்டார். பார்வையிழந்தவர் சொன்னார், “உண்டு! இரவு ஒன்பது மணிக்கு மேல் நமது போட்டி நடைபெற வேண்டும்” என்று. அந்தக் காலங்களில் இரவு நேரத்தில் ஒளிவெள்ள விளையாட்டுப் போட்டிகள் கிடையாது. இருவருக்குமே அப்போது இருட்டாகத்தான் இருக்கும்.
Leave a Reply