– கே.ஆர்.நல்லுசாமி
வளர வேண்டும் என்ற ஆசை. அதை நிலை நிறுத்த வேண்டும் என்ற ஆசை, வளர்ந்தவர்களில் முதன்மையாக வர வேண்டும் என்ற ஆசை, இவைகள் எல்லா ஆசைகள் வருவதும், அவைகளை அடைவதும் தானே மகிழ்ச்சியும்கூட.
ஆனால் இவைகளை எல்லாம் சாதாரணமாக கடந்து வர முடிகிறதா?
நிச்சயமாக கடந்து வருவது சுலபமல்ல. அதே போல் கடந்து வருவது கடினமும் அல்ல. வேதனையை சுமந்து, சோதனையை கடந்து, சாதனை புரிவதுதானே வெற்றி.
எந்த எந்த நேரத்தில் வலி ஏற்படுகிறதோ அப்பொழுது எல்லாம் ஒரு சிறந்த வழி தெரிந்து விட்டால் பயணம் இனிதுதான்.
தொழிலாளியோ, முதலாளியோ, ஏழையோ, பணக்காரனோ வலியில் வேறுபாடு இல்லை. வழி காட்டுபவர்கள் எல்லாம் வலியை கொடுத்தால் வளர்வது எப்படி?
வங்கியாளர்கள் வாடிக்கையாளர்களின் வளர்ச்சிக்கு உதவுவது வாடிக்கையாக இருக்கும். ஆனால் அற்ற்ங்ள்ற்ஹற்ண்ர்ய்-ல் கையொப்பம் போட்டதற்காக ரூ. 500/- கணக்கிலிருந்து எடுத்துக் கொண்டார்கள். நம்மை கேட்காமலேயே நமது கணக்கிலிருந்து எடுத்துக்கொள்ள அவர்களுக்கு அனுமதி கொடுத்துள்ளோமே. ஆகவே, எடுத்துவிட்டு கூறினார்கள். விபரம் அறிந்ததும், வேதனை தாங்க முடியவில்லை. வங்கியின் தன்ப்ங்ள் என்றார்கள்.
அதே வாரத்தில் அந்த வங்கியில் 50 புதிய வாடிக்கையாளர்களை சேமிப்புக் கணக்கு துவங்க அறிமுகப்படுத்தி அறிமுகத்திற்காக கையொப்பம் போட்டிருந்தேன். எந்த வாக்குவாதமும் செய்யாமல் 50 கையெழுத்திற்கு ரூ. 100/- வீதம் ரூ. 5000/- எனது கணக்கில் வரவு வைத்துவிடுங்கள். இது எங்கள் நிறுவனத்தின் தன்ப்ங்ள் என்று கூறிய சில நிமிடங்களிலேயே எடுக்கப்பட்ட ரூ. 500/- திரும்ப வரவு வைக்கப்பட்டது. எதற்கு தேவையில்லாத விவாதம்? கிடைத்தது வலி இல்லாத வழி. யாராக இருந்தாலும் கேட்கும் விதத்தில் கேட்டால் வெற்றி கிட்டும். இல்லையேல் விபரம் கிட்டும். குழப்பம் நீங்கி குதூகலம் பொங்கும்.
தன்னைப்பற்றி ஆயிரம் அனுபவங்களையும் அறிமுகங்களையும் கூறிக்கொண்டு வேலையில் சேர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கும்போது மற்றொரு வாய்ப்பு வரும் பொழுது திடீர் என்று இருந்த இடத்தை துளியும் நினைக்காமல் உடனே வெளியேறும் பழக்கம் இன்று அதிகமாகிவிட்டது. வாய்ப்புகளை பயன்படுத்துவதில் தவறில்லை. இருப்பதை உதைத்துத் தள்ளிவிட்டு ஓடக்கூடாது அல்லவா? தனக்கு வேறு வாய்ப்பு கிடைத்து விட்டது. நாளை முதல் வரமாட்டேன் என்ற செய்தியை வீட்டிற்குப் போகும்போது கூறியவருடன் சில வார்த்தைகள் பேசினேன்.
ஒரே வரியில் கூறிவிட்டீர்கள். ஆனால் அதனால் எனக்கு ஏற்பட்ட வலி எவ்வளவு என்று உங்களுக்குத் தெரியாது இல்லையா? வாழ்க்கைக்கு வழி காண்பித்த எனக்கு வலியை ஏற்படுத்தியது நியாயமா?
உங்கள் வளர்ச்சிக்குத் தடையாக நாங்கள் இல்லை. விடை பெறுவதற்கான கால அவகாசம் எடுத்துக் கொள்ளலாம் அல்லவா? வேலைக்கு வருகின்ற உங்களுக்கு இன்று முதல் வேலையில்லை என்று நான் கூறியிருந்தால் உங்கள் மனம் என்ன பாடுபட்டிருக்கும். அதுபோலத்தான் எனது மனமும்.
இனியாவது வேலை பார்க்கும் இடத்தை விட்டு வெளியேறும்போது நல்ல நிறுவனங்களை விட்டு வெளியேறும்போது, நல்ல வாய்ப்பு வருகின்ற காரணத்தால் இங்கிருந்து நின்றுவிட முடிவு செய்துள்ளேன். எனது இடத்திற்கு வேறு ஒரு நபரை தேர்வு செய்து கொடுத்தால் அவருக்கு எனது பணியை சொல்லிக் கொடுத்துவிட்டுச் செல்கிறேன் என்று கூறினாலே உங்களின் மதிப்பு எப்படி இருக்கும் என்று எண்ணிப் பாருங்கள், என்று கூறியதோடு புதிதாக செல்கின்ற இடம் பிடிக்கவில்லை என்றால் நான் கூறியதுபோல் கூறிவிட்டு மீண்டும் இங்கே வரலாம். எப்படி வருவது என்று தயங்க வேண்டாம், என்று கூறி அனுப்பி வைத்தேன்.
இப்பொழுது அவருக்கு வலி இல்லாமல் வழியைக் கூறும்போது எனக்குள் ஏற்பட்ட வலியும் போய்விட்டது.
வலி இல்லாத வாழ்க்கைக்குத்தானே விழிபிதுங்க உழைக்கிறோம். பின் ஏன் வலி வரும்போது கவலைப்பட வேண்டும். கவலை தானே வலிக்கு மருந்து என்று தோன்றுகிறது. ஆனால் அந்த மருந்து வலியை குணப்படுத்த முடியாது.
பதிலாக தீர்வுக்கு சரியான மருந்து நல்லவர்களின் தொடர்பு, அதை கடைப்பிடிக்கும் திறமை, அதிலிருந்து கிடைக்கின்ற அனுபவம்தான் சிறந்த வழி. அதுதான் வெற்றியின் வழியும்கூட.
விழிகளை உயர்த்தி வியர்வையை சிந்து
வலியை விரட்ட ஆயிரம் வழிகள்.
தன்னைப்பற்றி ஆயிரம் அனுபவங்களையும் அறிமுகங்களையும் கூறிக்கொண்டு வேலையில் சேர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கும்போது மற்றொரு வாய்ப்பு வரும் பொழுது திடீர் என்று இருந்த இடத்தை துளியும் நினைக்காமல் உடனே வெளியேறும் பழக்கம் இன்று அதிகமாகிவிட்டது.
nakkiran
அந்த வங்கியில் 50 புதிய வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட வலி எவ்வளவு என்று உங்களுக்குத் தெரியாது இல்லையா?
உங்கள் மனம் என்ன பாடுபட்டிருக்கும். அதுபோலத்தான் 50 புதிய வாடிக்கையாளர்கள மனமும்