இளைஞர்கள் அந்தப் படகில் ஏறினார்கள். படகோட்டி மண்டியிட்டு வழிபாடு செய்வதைக் கண்டு சிரித்தார்கள் “காற்றில்லை, கடல் அமைதியாயிருக்கிறது” என்று கேலி செய்தார்கள். படகோட்டி வந்து படகை இயக்கினார். சிறிது தூரம் போனதும் காற்று பலமாக வீசியது. அனைவரும் பிரார்த்திக்கத் துவங்கினார்கள். படகோட்டி
எச்சரிக்கையாய் இயக்கி படகைக் கரை சேர்த்தார். “நீங்கள் எங்கள் பிரார்த்தனையில் பங்கெடுக்கவிலையே? வியப்புடன் கேட்டவர்களுக்குச் சொன்னார். “கடல் அமைதியாய் இருக்கையில் நான் பிரார்த்திக்கிறேன். கொந்தளிக்கும் போது படகைக் கையாள்கிறேன்”. இதுதானே நமக்கும் வேண்டும்.
Premkumar
This Story is very nice. I learn very good information.
M.J. SYED ABDULRAHMAN
அமைதியாய் இருக்கையில் நான் பிரார்த்திக்கிறேன். கொந்தளிக்கும் போது கையாள்கிறேன்”.
thank you