சுதந்திரா ஹாலிடே ஸ்கூல் நூற்றுக்குநூறு இயக்கம் நமது நம்பிக்கை இணைந்து வழங்கும் புதுவாசல்

மாணவர் பகுதி

கொடைக்கானலில் நடைபெற்ற சுதந்திரா ஹாலிடே ஸ்கூலில் சம்மர் கேம்ப் நிறைவு விழாவில் பெற்றோர் ஒருவர், ‘தான் பல நலச்செயல்கள் சிறிய அளவில் செய்வதாகவும், ஆனால் நான் ஒருவன் செய்வதால் என்ன ஆகி விடப்போகிறது? இந்த உலகில் என்ன மாற்றம் வந்து விடப்போகிறது? என்று அடிக்கடி தோன்றுவதாகவும், நான் என் செயல்களை தொடர்வதா வேண்டாமா’ என்றும் கேட்டார்.

தண்ணீர்த் தொட்டியில் தவறி விழுந்த எறும்பு தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அதை எடுத்து தரையில் விடுகிறோம். நாம் செய்த இந்த செயலால் இந்த உலகத்தில் எதுவும் மாறிவிடப்போதில்லை. ஆனால் எறும்பின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாறுதல் ஏற்பட்டு விடுகிறது. எறும்பைப் பொறுத்தவரை அதற்கு புது உலகமே கிடைத்த மாதிரிதான்.

நல்ல முயற்சிகள் எல்லாமே விதைகள். எல்லா விதையும் துளிர்க்கும். தழைக்கும்.

அங்கொன்றும் இங்கொன்றுமாய் நடக்கும் நல்ல முயற்சிகளால் என்ன ஆகிவிடப்போகிறது ?

ப்ரிட்ஜில் ப்ரீசரில் தண்ணீர் எப்படி ஐஸ்கட்டியாக மாறுகிறது என்று கவனித்திருக்கிறீர்களா ?

ப்ரீசரில் தண்ணீரை ஐஸ்கட்டியாக மாற்றப் பயன்படும் தட்டில் தண்ணீர் ஊற்றியவுடன் தண்ணீர் ஐஸ்கட்டியாக மாறிவிடாது. தண்ணீரில் முதலில் சில ஐஸ் துகள்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக உருவாகும். சிறிது நேரத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்த ஐஸ் துகள்கள் பெரிதாகும். திடீரென்று ஒரு நொடியில் சிறிய ஐஸ்துகள்கள் எல்லாம் இணைந்து ஐஸ்கட்டியாக மாறும்.

அதே போல நல் முயற்சிகள், நம்பிக்கை முயற்சிகள் எல்லாம் ஒரு நாள் ஒன்றாகும். உலகம் முழுவதும் நம்பிக்கையால் நிறையும்.

அதுவரை நம்பிக்கையாய் வாழ்வோம். நம்பிக்கையை வாழவைப்போம்.

என்றும் நம்பிக்கையுடன்..

கிருஷ்ண.வரதராஜன்

சுதந்திரா ஹாலிடே ஸ்கூல்
நூற்றுக்கு நூறு இயக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *