கேள்வி நாங்கள் பதில் நீங்கள்

ஒரு சிறந்த பள்ளி எப்படி இருக்க வேண்டும்?

சென்ற மாத இதழில் கேட்கப்பட்ட கேள்வி

நம் நாட்டில், சிறந்த தலைவர்கள், அதிக அளவில் உருவாக நாம் என்ன செய்ய வேண்டும் ?

நம் நாட்டில் சிறந்த தலைவர்கள் அதிக அளவில் உருவாக நாமே தலைவர்களாக முயற்சிப்பது தான் சிறந்த வழி. இம் முயற்சி எடுக்கும் முன் சிறந்த தலைவர்களுக்கு இருக்க வேண்டிய நற்பண்புகள் நம்மிடம் உள்ளனவா என சுயபரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

சம்பத், கோவை.

நம் நாட்டில் சிறந்த தலைவர்கள் அதிகளவில் உருவாக, மாணவப் பருவத்திலிருந்தே குழந்தைகள் வெற்றியாளர்களைப் படிக்க வேண்டும். இச்செயலால், அவர்களுக்கு வெற்றிகளை நோக்கி செயல்படத் தேவையான முனைப்பும், உற்சாகமும், நேர்மறை எண்ணங்களும் மனதில் வலுப்படும். தம் நிலையை மேம்படுத்திக் கொள்ளவும், வாழ்வின் தடைகளை மிக நுட்பமாக அணுகவும் தக்க வழிகாட்டுதலாக சாதனையாளர்களின் வரலாறுகள் உதவும்.
நாகராஜன், அய்யம்பாளையம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *