நமக்குள்ளே

மரபின்மைந்தன் முத்தையா அவர்களின், ‘மனது வைத்தால் மலையை நகர்த்தலாம்’ சிந்தனையை செம்மைப்படுத்தி நம்பிக்கைக்கு நீரோட்டம் பாய்ச்சுகிறது. சிகரம் தொட வழிகளை தேட

வேண்டுமே, தவிர இடையில் வரும் தடைகளைக் கண்டு துவளக்கூடாது என தெளிவுபடுத்தி இருக்கிறது! நன்றிகள்!

ஜி.ரெஜினாபானு, பழனி

கரிபால்டி, கிரண்பேடி போன்றோரின் ஆளுமை பற்றிய செய்தி புத்தெழுச்சி கொள்ளச் செய்தது. இலட்சியத் தேடலில் உயரே… உயரே.. பயணிக்க சிறகாய் இருக்கும் நமது நம்பிக்கைக்கு பாராட்டுக்கள்.

தங்கதாஸ், கீரனூர்

மே இதழில் வெளியான ‘வெற்றிவாசல் 2009’ல் இரமேஷ்பிரபா அவர்களின் கட்டுரை மிகவும் அருமையானதாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது. மரபின்மைந்தன் முத்தையா அவர்களின் கடைசிப்பக்க கவிதை மிகவும் நெகிழ வைத்தது.
கீர்த்திகா, கணபதி.

நமது நம்பிக்கையில் வெளியாகும் அனைத்து கட்டுரைகளும் முத்து முத்தாக உள்ளது. ஒவ்வொரு இதழும் வாழ்க்கையின் வழிகாட்டி, துணிவு பெறத் தூண்டுகோல், முன்னேற முயல்வோர்க்கு ஊன்றுகோல், அனைத்துமே சமுதாயத்திற்கு எழுச்சியும், சிந்தனை ஊக்கமும் தருகின்றன. மாதம் இருமுறை இதழாக, ‘நமது நம்பிக்கை’யை வெளியிட வேண்டுகிறோம்.
இராஜவேல், நாமக்கல்.

நமது நம்பிக்கை பத்திரிக்கையின் வாசகி நான் மிகவும் பயனளிக்கக் கூடிய பல நிகழ்ச்சிகளை நடத்துகிறீர்கள், பலப்பல அறிஞர்கள் நிகழ்ச்சி படைக்கிறார்கள். உங்களது புத்தகம் படித்து பல பகுதிகளை குறித்து வைத்துக் கொள்வேன். என் வாழ்க்கைக்கு அது மிகவும் உபயோகமாக உள்ளது.

ப்ரவீணா, நரசிம்மநாயக்கன்பாளையம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *