– கனகலஷ்மி
நீங்கள் எத்தனை நாட்கள் அல்லது வாரங்கள் தோல்வி அடைந்திருக்கிறீர்கள்?
தொடர் தோல்வியால் எத்தனை முறை சோர்ந்து போயிருக்கிறீர்கள்? என்று நம்மை யாராவது கேட்டால் நம்மிடம் ஏராளமான பதில்கள் இருக்கும். ஆனால் இந்த கேள்விக்கான பதிலை கூறும் முன் நீங்கள் அறிந்து கொள்ளவேண்டிய சுவாரஸ்யமான தகவல் ஒன்று உண்டு.
ஒரு குறிப்பிட்ட மனிதரின் வாழ்க்கைப் புத்தகத்தில் வெறும் தோல்விகள் மட்டுமே அடுத்தடுத்து பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த நபர் தோல்வியின் தோளிலேறி அலட்சியமாகப் பயணம் செய்தார். மேலே குறிப்பிட்ட கேள்விகளுக்கு பதில் கூறும் முன், அவர் வெற்றிப் பாதை உங்கள் பார்வைக்கு:
1831 – வணிகத்தில் தோல்வி
1832 – தேர்தலில் தோல்வி
1833 – மீண்டும் வணிகத்தில் தோல்வி
1834 – தேர்தலில் வெற்றி
1835 – மனைவி மரணம்
1836 – நரம்புத் தளர்ச்சி
1838 – சபாநாயகர் போட்டியில் தோல்வி
1843 – நில அதிகாரி போட்டியில் தோல்வி
1843 – கட்சியில் தோற்கடிக்கப்பட்டார்
1846 – கட்சியில் வெற்றி
1848 – மறு தேர்தலில் தோல்வி
1855 – செனட் உறுப்பினர் தேர்தலில் தோல்வி
1856 – துணை அதிபர் தேர்தலில் தோல்வி
1860 – அதிபர் தேர்தலில் வெற்றி
யார் இவர்?
இவர் ஒரு சாதாரண மனிதர். தனக்கு சாதகமில்லாத சூழல்களை வாழ்நாளில் ஏற்க மறுத்தவர். வலிகள் தாங்கிய மனிதராக மட்டும் இல்லாமல் வலிமையான மனிதராக வாழ்ந்தவர். இவர் முயற்சிகளை முட்டாள்தனம் என்று ஏளனம் செய்தவர்களின் கருத்துக்களை பற்றியும் கவலைப்படாமல் தன் இலக்குகளில் மட்டும் இருக்கமாக இருந்தவர்.
யார் இவர்?
ஆப்ரகாம் லிங்கன்.
வாழ்வில் தவறும் இடத்திலெல்லாம், நின்று விளக்கம் சொல்வதை விட்டுவிட்டு, அடுத்த நிலைகளை நோக்கி நகர்பவர்களே வெற்றியாள ராகிறார்கள். எந்தக் குழந்தையும் நடை பயில்கையில் மனம் தளர்வதில்லை. மாறாக கற்றுக் கொள்கிறது. ஒவ்வொரு தோல்வியும், அனுபவங்களை தான் கற்பிக்கின்றது. வாழ்க்கை பயில்வதற்காகவும், வளர்வதற்காகவும் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட களம் என்பதை தான் ஆப்ரகாம் லிங்கனின் வெற்றித் திசைகள் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.
இப்பொழுது கூறுங்கள்…
நீங்கள் எத்தனை நாட்கள் அல்லது வாரங்கள் தோல்வி அடைந்திருக்கிறீர்கள்?
தொடர் தோல்வியால் எத்தனை முறை சோர்ந்து போயிருக்கிறீர்கள்?
நிச்சயம் ஒரு முறைகூட இல்லை என்பது தான் உங்கள் பதிலாக இருக்க வேண்டும். காரணம், நீங்கள் ஒவ்வொரு முறை தோற்கிறபோதும் வெற்றிக்கான புதிய வழியை கண்டு பிடித்திருக்கிறீர்கள்.
Guru
“வாழ்வில் தவறும் இடத்திலெல்லாம், நின்று விளக்கம் சொல்வதை விட்டுவிட்டு, அடுத்த நிலைகளை நோக்கி நகர்பவர்களே வெற்றியாள ராகிறார்கள்.”
Sure…
Guru